கோவை மக்களை ஈர்க்கும் - வால்பாறை நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்குகாட்சி

 Friday, May 10, 2019  02:30 PM

வால்பாறை பகுதியில் 9–வது கொண்டை ஊசி வளைவு காட்சிமுனை, பாலாஜிகோவில், கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை, நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை ஆகியவை சிறந்த சுற்றுலா தலங்கள் உள்ளன.

இதில் நல்லமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை, மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த காட்சிமுனை பகுதியில் இருந்து பார்க்கும் போது கேரள வனப்பகுதிகளும், அங்குள்ள ஆதிவாசி பழங்குடியினர் குடியிருப்புகளும், வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளும் நன்றாக தெரியும். இது பார்வையாளர்களை வெகுவாக கவரும். எனவே சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு வந்து செல்கின்றனர்.

ஆபத்தான விளையாட்டு


Arunhit
ஆனால் இந்த காட்சி முனை பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அரண் இல்லை. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்களின் பாதுகாப்பையும் மீறி காட்சி முனையின் ஓரத்திற்கு செல்கின்றனர். அங்கு நின்று கொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது உயிரிழப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:–

நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான வகையில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும். இங்குள்ள வனத்துறையின் கட்டிடம் ஒன்று யாருக்கும் பயனின்றி உள் ளது. இதை சீரமைத்து ஆதிவாசி பழங்குடியின மக்கள் கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். அதில் மிளகு, தேன், தைலம், ஏலக்காய் போன்ற மலைப்பகுதி பொருட்களையும் விற்ற அனுமதிக்கலாம்.
வருவாய் கிடைக்கும்

மேலும் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பற்றிய கையேடு, காட்டுத்தீ பரவாமல் தடுப்பது, பிளாஸ்டிக்கின் தீமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து துண்டு பிரசுரங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இது சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதோடு ஆதிவாசி பழங்குடியினர் மற்றும் வனத்துறைக்கும் வருவாய் கிடைக்கும். பயனற்ற கட்டிடமும் பயன்பாட்டிற்கு வரும்.

இல்லை என்றால் அந்த கட்டிடத்தை டெலஸ்கோபிக் இல்லமாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் சுற்றுலாபயணிகள் பாதுகாப்பாக அங்கிருந்தபடி கேரள வனப்பகுதி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இயற்கை அழகை பார்த்து ரசிக்க முடியும். அதோடு நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு மேலும் அதிகளவு சுற்றுலாபயணிகள் வரும் நிலை உருவாகும். இதன் மூலம் சுற்றுலா வருவாய் மற்றும் அதை சார்ந்த வர்த்தகம் வால்பாறை பகுதியில் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மானாம்பள்ளி வனத்துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.


Arunhitech_curom1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Arunhitech_sqr2
Arunsqr4
Arunhitechsqr5
AdSolar1
arunhitech_sqr1
Website Square Vanavil2