டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: யானை சவாரி செய்வதில் ஆர்வம்

 Wednesday, April 24, 2019  05:30 PM

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது டாப்சிலிப். இங்குள்ள இயற்கை எழில்கொஞ்சும் வனத்தின்அழகு மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்க தமிழகம், கேரளா உள்படபல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்கும் வகையில் கடந்த 10 நாட்களில்மட்டும் சுமார் 5 ஆயிரம் சுற்றுலாபயணிகள் டாப்சிலிப்பிற்கு வந்துசென்று உள்ளனர். இவர்கள்மூலம் அரசுக்கு கட்டண வசூல் அதிகரித்துள்ளது.

தற்போது, கோடைவிடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண் டாட சுற்றுலா பயணிகள்தொடர்ந்து டாப்சிலிப்பில்குவிந்து வருகின்றனர். இவ்வாறு குவிந்து வருபவர்கள் இங்கு யானை சவாரி செய்வதில் ஆர்வம்காட்டு கின்றனர். அங்குள்ள விடுதி அறைகளில் தங்கி இருந்து கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிடுகின்றனர்.

Arunhit

கடந்த சில நாட்களாக டாப்சிலிப் வனப்பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் முன்பு இருந்தவறட்சி நிலை மாறி, பச்சை பசேல் என பசுமைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் முதல் வாரம் வரைசுற்றுலா பயணிகள்வருகை அதிகரிக்கவாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர்கூறியதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குஉட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்குஆண்டுதோறும் கோடைவிடுமுறையின் போது வெளியூர் சுற்றுலாபயணிகள் கூட்டம்அதிகமாக இருக்கும். இதில், இந்த ஆண்டு டாப்சிலிப்பிற்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் கடந்த 10 நாட்களாக வழக்கத்தை விடஅதிகமாகஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Arunhitech_curom1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Arunhitech_sqr2
AdSolar1
Arunhitechsqr5
Arunsqr4
Website Square Vanavil2