இயற்கையின் அற்புதம் - வால்பாறை புல் மலை (Gross Hills)

 Wednesday, April 24, 2019  04:30 PM

இயற்கையில் பல்வேறு அற்புதங்களில் ஒன்றான 'கிராஸ் ஹில்ஸ்' போன்ற வனப்பகுதிகளை பாதுகாப்பதே, நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் சொத்தாகும்.

வால்பாறையின் அதிசயம் அக்கா மலைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும். இந்த புல்வெளிதான் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கும் அட்சய பாத்திரங்கள். புல்வெளியில் இருந்து கசியும் நீர்தான் சிறு சிறு ஓடைகளாக உருவாகி ஒன்று சேர்ந்து ஆர்ப்பரிக்கும் ஆறாக மாறி நாட்டை வளப்படுத்துகிறது என்பது இயற்கையின் சுழற்சி முறை. கொடிய விலங்குகளின் நடமாட்டம் உள்ள அக்காமலை புல்வெளியை சுற்றிப்பார்க்க வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்.

தேசிய பூங்காவாக, பாதுகாக்கப்பட்ட வனமாக, புல்வெளி மலைகளாக மட்டுமே அறியப்பட்டது. உண்மையிலேயே நேரில் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அதுவும் ஒரு பூலோக சொர்க்கம் என்று. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை புற்களை போர்வையாய் போர்த்தியது போன்ற மலைப்பிரதேசமாய், வேர்களில் பிடித்து வைக்கும் நீரை, மக்களின் நீராதாரமாகவும் மாற்றிக் கொடுக்கும் அற்புத வனாந்திரம் அது.

Arunhit

ஆனைமலை புலிகள் காப்பகம், 958 சதுர கி.மீ.,பரப்பரளவில் அமைந்துள்ளது. வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி, உடுமலை, அமராவதிஆகிய, 6 வனச்சரகங்களை உள்ளடங்கியதாகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உலகின் அரியவகையான வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள், எங்கு பார்த்தாலும் தொட்டுவிடும் துாரத்தில் நீர்வீழ்ச்சிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் உள்ளன.அனைத்துக்கும் ஆதாரம் வால்பாறையிலிருந்து, 16 கி.மீ, தொலைவில் உள்ள அக்காமலை கிராஸ் ஹில்ஸ். மத்திய அரசால் தேசிய பூங்காவாக இந்தப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

அமைதியான சூழலில் இயற்கை அனையின் மடியில் தவழும் அக்காமலைகிராஸ் ஹில்ஸ் பகுதியில் இல்லாத வனவிலங்குகளே இல்லை. அதே போல் பாதுகாக்க பட்ட இந்த புல்வெளியை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, அமைதியான இடத்தில் அமைந்துள்ள கிராஸ்ஹில்ஸ் பகுதியில் தான் ஆண்டு தோறும் அதிக அளவில் மழை பெய்கிறது. இது போன்ற வனப்பகுதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதால் தான் வால்பாறை மலைப்பகுதியில் ஆண்டு தோறும் பருவமழை தவறாமல் பெய்துவருகிறது.

மலை முகடுகளுக்கு மத்தியில் இயற்கை அன்னை வரைந்த அற்புதமான ஓவியம் தான் அக்காமலை கிராஸ் ஹில்ஸ். இந்தப்பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா சூட்டிங் எடுத்துள்ளனர். கடந்த, 2008 ம் ஆண்டு, வால்பாறை மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் காணப்படும் இயற்கை வளங்களையும், அரியவகை வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Arunhitech_curom1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Arunhitech_sqr2
arunhitech_sqr1
Arunsqr4
AdSolar1
Arunhitechsqr5