திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 Wednesday, April 24, 2019  09:58 AM

உடுமலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் திருமூர்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள படகு சவாரி, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை ஆகியவற்றைக் கண்டுரசிக்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

Arunhitech_curom1

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பத்தால் திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து முற்றிலும் நின்றது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால் பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இங்கு வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவி நீரில் குளித்து மகிழ்ந்தனர். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Arunhit



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Arunhitech_sqr2
Arunhitechsqr5
arunhitech_sqr1
Arunsqr4
AdSolar1