'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:

 Tuesday, April 23, 2019  06:30 PM

'ஹோப் காலேஜ் இறங்குங்க!,'' கண்டக்டர் சொல்லி முடித்தபோது, இறங்கிய யாருமே காலேஜ் படிக்கும் டீனேஜ் காரர்களில்லை; அதென்ன வயசானவுங்க படிக்கிற காலேஜா?

இந்த ஊருக்குப் புதிதாய் வரும் பலரும் கேட்கிற கேள்விதான் இது. புதியவர்களுக்கு மட்டுமில்லை; இதே கோவையிலேயே இருந்து கொண்டு 'ஹோப் காலேஜ்' ரகசியம் தெரியாதவர்களுக்காக...

மண்ணுக்கு பெருமை சேர்த்த மகத்தான விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, மேலை நாடுகளில் உள்ள பல்தொழில் நுட்பக் கல்லூரிகளைப் (பாலிடெக்னிக்) போல, கோவையிலும் ஒரு தொழில் நுட்ப கல்லூரியை துவங்கவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். தன் விருப்பத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப்பிடம் அவர் கூறினார்.

அதற்கு அவர், 'கல்லூரி துவங்குவது என்றால், அதற்கான இடத்தைத் தேர்வு செய்து, கட்டிடம் கட்ட நாட்கள் ஆகும்; பொறுத்திருந்து செய்யலாம்,'' என்றார்.

Vanavil New1

தன் முயற்சியில் சற்றும் தளராத நாயுடு, '' பீளமேட்டில் ஆர்கஸ் நகரில் எனக்கு சொந்தமான கட்டிடம் இருக்கிறது;அதை எடுத்துக்கொள் ளுங்கள்; பின்னர் கட்டிடம் கட்டிக் கொள்ளலாம்,'' என்றார் ஜி.டி.நாயுடு.

தனது கட்டிடத்தை கொடுத்த தோடு, மாணவர்களின் பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களையும் கொடுத்து உதவினார். கல்லூரி உருவாகக் காரணமாக இருந்த ஜி.டி. நாயுடுவின் பெயரை அக்கல்லூரிக்கு வைக்க ஆர்தர் ஹோப் விரும்பினார். அதை நாயுடு மறுத்ததால் ஆர்தர் ஹோப் பெயர் சூட்டப்பட்டு, 1945 ல் ஆர்தர் ஹோப் காலேஜ் துவங்கப் பட்டது.

ஹோப்ஸ் கேட்டுக்கொண்டதற் கிணங்க, கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஜி.டி. நாயுடு ஏற்றார். பிறகு, மருத்துவ கல்லூரிக்கு எதிரில் அரசு பாலிடெக்னிக் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு அந்த கல்லூரி மாற்றப்பட்டது. பிறகு தடாகம் சாலைக்கு அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது.

கல்லூரி இடம் பெயர்ந்து விட்டாலும், அப்பகுதிக்கான பெயராகவே மாறி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டது ஹோப் காலேஜ்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2