நம்ம ஊரு சமையல் : வெண்டைக்காய் - முட்டை பொரியல்

 Monday, April 22, 2019  07:30 PM

உங்கள் சுவையை தூண்டும் வெண்டைக்காய் முட்டை பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெண்டைக்காய் முட்டை பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

வெண்டைகாய் - அரை கிலோ
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
முட்டை - 2
உ.பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு ,சீரகத்தூள் - கால்,கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை- 2 இணுக்கு
மஞ்சள் தூள் - பின்ச்
எலுமிச்சை - பாதி (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவைக்கு


Vanavil New1
உணவு செய்முறை : வெண்டைக்காய் முட்டை பொரியல்

Step 1.

முதலில் வெண்டைகாயை நன்கு கழுவி துடைத்து சிறியதாக கட் செய்து கொள்ளவேண்டும்.
Step 2.

பின்னர் முட்டையை,மிளகு,சீரகத்தூள்,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து அடித்து வைக்கவேண்டும். பின்பு வெங்காயம் கட் செய்து வைக்கவும்.மிளகாய் நீளமாக கட் செய்து வைக்கவேண்டும்.
Step 3.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை,மிளகாய் தாளித்து வெங்காயம் வதக்கவும்,
Step 4.

பின்பு வெண்டைகாய் சேர்த்து வதக்கி ,உப்பு சேர்த்து ,விருப்பப்பட்டால் பாதி எலுமிச்சை பிழிந்து சுருளா வதக்கவேண்டும்.
Step 5.

பின்பு அடித்து வைத்த முட்டை சேர்த்து வெந்தவுடன் பிரட்டவேண்டும்.சுவையான வெண்டைக்காய் முட்டை பொரியல் ரெடி.சூடாக சாததிற்கு தொட்டுக்கொள்ள பரிமாறவும்







Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2