திருமூர்த்தி மலை பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது

 Sunday, April 21, 2019  03:30 PM

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், 950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில் பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா என சுற்றுலா மையமாக உள்ளது.பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த மாதம் அருவியில் நீர்வரத்து இல்லாததோடு, சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக காணப்பட்டது.இந்நிலையில், தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.ஆர்ப்பரிக்கும் அருவி கடந்த ஆண்டு, வட கிழக்கு பருவ மழை ஏமாற்றிய நிலையில், இந்தாண்டும், கடந்த நான்கு மாதமாக போதிய மழையில்லை. இதனால், ஒரு மாதமாக பஞ்சலிங்கம் அருவியில் நீர்வரத்து இல்லாமல், வறண்டு காணப்பட்டது. சிறிதளவு மட்டுமே நீர் விழுந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், கோடை மழை பெய்ய துவங்கி, நேற்றுமுன்தினம் திருமூர்த்திமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, மீண்டும் அருவியில் நீர் கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.நேற்று, கோவை, திருச்சி, குளித்தலை, கரூர், பொள்ளாச்சி, தாராபுரம் என பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலா வாகனங்களிலும், கார்களிலும் வந்திருந்தனர்.


Vanavil New1
நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதோடு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தம் எடுக்க பக்தர்கள் வருகை கிராமங்களிலுள்ள கோவில்களில் சித்திரை திருவிழா துவங்கியுள்ளது.

திருமூர்த்திமலையிலிருந்து, தீர்த்தம் எடுத்துச்சென்று, அம்மன் கோவில்களில் தீர்த்த அபிேஷகம் செய்து வழிபடுவதற்காகவும், ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து, தீர்த்தம் எடுத்துச்சென்றனர்.

சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.மே இறுதி வரை சீசன்அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'திருமூர்த்திமலையில், கோடை சுற்றுலா சீசன் துவங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், பஞ்சலிங்கம் அருவிக்கு வந்து செல்கின்றனர். மே மாத இறுதி வரை, சீசன் இருக்கும். தற்போது, மழை பெய்து, அருவியிலிலும் நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.







Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2