கோவையில் கொட்டியது மழை

 Friday, April 19, 2019  09:37 AM

கோவையில் கோடை மழை நேற்று கொட்டித்தீர்த்தது. விவசாயிகள் கொண்டாடி தீர்த்தனர்.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் தவித்திருந்த வேளையில், கடந்த இரு நாட்களாக கோவையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை கோவை புறநகர் பகுதியிலுள்ள மலையோர கிராமங்களில் மாலை, 6:00 மணிக்கு துவங்கிய மழை, 7:00 மணி வரை தட்டியெடுத்தது.விவசாய விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது.


Vanavil New1
அடுத்து இரண்டு நாட்களுக்கு, மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,

'வங்கக்கடலில் உருவான குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக மழை பெய்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை தொடரும். விவசாயிகள் விளை நிலங்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். அறுவடைகளை வேறு நாளுக்கு ஒத்தி வைக்கலாம். காற்று சுமாரான வேகத்தில் வீசும். மிதமான மழை பெய்யும்; கனமழைக்கு வாய்ப்பு இல்லை' என்றனர்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2