கோவையில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் வாக்குச் சாவடியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.


Source: dinamalar
 Friday, April 19, 2019  09:28 AM

கோவை, கணபதி காந்தி மாநகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (81). நகரமைப்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கோவை, கணபதி மாநகரில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தனது மகனுடன் சென்றார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

Vanavil New1

இதைப் போல, ஈச்சனாரி பாடசாலை பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (86). இவர் வாக்களிப்பதற்காக ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு சென்றார். அங்கு, அவரது விரலில் அழியாத மை வைக்கப்பட்டு, கைரேகை வைக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். வாக்குச் சாவடி அலுவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் வந்திருந்த மருத்துவ அலுவலர்கள் அய்யம்மாளை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2