திப்புசுல்தான் காலத்தில் குதிரை லாயமாக இருந்த கட்டடம் இன்று கோவை மாவட்ட கருவூலம்

 Thursday, April 18, 2019  04:30 PM

கோவை நகரின் மையப் பகுதியாக விளங்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 266 ஆண்டுகால வரலாறு கொண்ட கட்டிடம், தற்போது மாவட்ட கருவூலமாக செயல்படும் கட்டிடத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. திப்பு சுல்த்தான் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 'ப' வடிவிலான இக் கட்டிடம் 4700 சதுர அடி பரப்பளவில் முற்றிலும் செங்கற்களால் ஆனது.


Arunhit
ஒன்றரை அடி அகல சுவர்களால் ஆன இக்கட்டிடம் மர வேலைப்படுகளால் ஆன மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டது. மன்னன் திப்புசுல்த்தான் காலத்தில் இக்கட்டிடம் 25க்கும் மேற்பட்ட குதிரைகள் கட்டப்பட்டு குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்டது. முக்கோன வடிவ மேற்கூரையை தேக்குமரங்களால் ஆன பிம்ப்ங்கள் தாங்கி பிடிக்கின்றன. சுண்ணாம்பு, கருப்புகட்டி, ஆற்று மணல் ஆகியவற்றை அரைத்து இக் கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

15க்கும் மேற்பட்ட தூண்கள் இக் கட்டிட வராண்டாவை தாங்கி நிற்கின்றன. ஜன்னல் மேலும் கீழும் திறந்து மூடும் வகையில் கலை நயத்துடனும் ஜன்னல் மற்றும் கதவுகள் தேக்கினால் காற்று, மழை, வெயில் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து காக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1779ல் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மன்னர் திப்பு சுல்த்தான் கொல்லப்பட்ட பின்னர், 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசமானதும், அவர் தம் கட்டுப்பாட்டில் இக் கட்டிடம் வந்தது. அப்போதும் கூட குதிரை லாயமாகத்தான் பயன்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் இக் கட்டிடம் மாவட்ட கருவூலமாக செயல்பட்டு வருகின்றது.


Arunhitech_curom1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Arunhitech_sqr2
Arunhitechsqr5
Website Square Vanavil2
arunhitech_sqr1
Arunsqr4
AdSolar1