தமிழகத்தில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள் இவர்கள் தான்


Source: maalaimalar
 Tuesday, April 16, 2019  11:41 AM

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் சொத்து மதிப்பு குறைவாக உள்ள ஏழை வேட்பாளகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த 31 ஏழை வேட்பாளர்கள் குறித்து தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக ஏழை வேட்பாளர்களின் பெயர்கள், போட்டியிடும் தொகுதி மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு வருமாறு:

நாம் தமிழர் கட்சி:

சிவரஞ்சனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ரூ. 15,000, மதிவாணன் தென்காசி தொகுதி - ரூ 21,000, மாலதி நாகப்பட்டினம் தொகுதி – ரூ.1.19 லட்சம், பாண்டியம்மாள் மதுரை தொகுதி – ரூ.1.5 லட்சம், சாந்தி பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம், சுபாஷினி மயிலாடுதுறை தொகுதி - ரூ 5.25 லட்சம், கல்யாணசுந்தரம் கோவை தொகுதி – ரூ.8.55 லட்சம், மணிமேகலை நீலகிரி தொகுதி – ரூ.9. 02 லட்சம், எம். சிவஜோதி சிதம்பரம் தொகுதி - ரூ 10.37 லட்சம், காளியம்மாள் வட சென்னை தொகுதி – ரூ.9.17 லட்சம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள்

வெற்றிச்செல்வி திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம், சனுஜா பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம், சித்ரா கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.
தீபலட்சுமி வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம், புவனேஷ்வரி ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம், பிரகலதா விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம், ருக்மணி தேவி தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம், தமிழரசி ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம், ஏ.ஜெ.ஷெரின் தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம், பாவேந்தன் அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20 லட்சம்.

மக்கள் நீதி மய்யம்:

Vanavil New1

அன்பின் பொய்யாமொழி விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம், முனீஸ்வரன் தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம், ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் கிருஷ்ணகிரி தொகுதி– ரூ. 20.1 லட்சம், அருள் திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம், விஜயபாஸ்கர் ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம், பிரபு மணிகண்டன் சேலம் தொகுதி–ரூ. 27.5 லட்சம், ரவி சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்.

அமமுக:

செங்கொடி நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

சு.வெங்கடேசன் மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.

பாமக:

வடிவேல் ராவணன் விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.

எஸ்டிபிஐ:

தெகலான் பாகவி மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்.


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2