சிறுவாணி அணையின் நீர் மட்டம் 12.45 அடியாக சரிவு


Source: dinamalar
 Tuesday, April 16, 2019  11:30 AM

சிறுவாணி அணையின் நீர் மட்டம், 12.45 அடியாக குறைந்திருக்கிறது. இருந்தாலும், அணையில் உள்ள இருப்பைக் கொண்டு, மே இறுதி வரை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியும் என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

கோவையின் 33 வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது சிறுவாணி அணை. இதன் மொத்த உயரம், 50 அடி. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, கிடைக்கும் மழை நீரால், ஆண்டுக்கு இரு முறை அணை நிரம்பும்.


Vanavil New1
கடந்தாண்டு எதிர்பார்த்ததை காட்டிலும், தென்மேற்கு பருவ மழை அதிகமாக பெய்தது. அதற்கு முன்னதாக கோடை மழையும் பெய்தது. குடிநீர் தேவைக்கு தண்ணீர் அதிகப்படியாக எடுத்தபோதிலும், வடகிழக்கு பருவ மழை பெய்து, நீர் மட்டத்தை ஓரளவு அதிகரித்தது.நடப்பாண்டு கோடை மழை பெய்யவே இல்லை. வெப்பம் சுட்டெரிப்பதால், தண்ணீர் ஆவியாவது அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் எடுப்பதால், நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

தற்போது, 12.45 அடியே நீர் மட்டம் இருக்கிறது. அணையில் உள்ள நீர்புகு கிணற்றில், மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. மூன்று வால்வுகள் நிலத்தை பார்த்தும், ஒரு வால்வு வானத்தை பார்த்தும் இருக்கும்.இதில், மூன்றாவது வால்வு, வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், கோடையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு நீர் இருப்பதால், மே வரை பற்றாக்குறை ஏற்படாது என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டு கோடை மழை பெய்யவே இல்லை. வெப்பம் சுட்டெரிப்பதால், தண்ணீர் ஆவியாவது அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் எடுப்பதால், நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2