100% வாக்குபதிவை வலியுறுத்தி 1050 ஓவியங்கள் வரைந்த 8வயது சிறுவன்!


Source: newstm.in
 Tuesday, April 16, 2019  11:06 AM

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 1,050 விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவனுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.


Vanavil NEw2
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியினரின் மகன் தர்ஷன் (8). அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். வரும் மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘let's vote, vote for better India, Power is in your finger, Be counted, your vote/your right உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய 1,050 விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளார்.

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் காண்பித்தார். இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாட்டர் கலர் கொண்டு இந்த ஓவியங்களை வரைந்ததாகக் கூறிய மாணவன், இதனை வரைய ஏழு நாட்கள் ஆனதாக கூறினார்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2