ஓட்டு எண்ணும் மையமான ஜி.சி.டி., கல்லுாரியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு

 Tuesday, April 16, 2019  10:30 AM

'ஓட்டு எண்ணும் மையம், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம், உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்,'' என்று, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

கோவை லோக்சபா தொகுதிக்குரிய ஓட்டுகளை எண்ணும் மையம், தடாகம் ரோடு, ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்யும் பணியில், பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அனைத்து அறைகள், சந்திப்புகள், சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


Vanavil NEw2
ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை, பூத் வாரியாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பணிகளை, மத்திய தேர்தல் பார்வையாளர் ரேணு ஜெய்பால், கலெக்டர் ராஜாமணி மற்றும் அலுவலர்கள், நேற்று பார்வையிட்டனர்.கலெக்டர் கூறியதாவது:ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையம், கேமரா மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.

இதற்கென பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் அறைகளின், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர வசதியாக, தடுப்புகள் அமைப்பது தொடர்பாக, அலுவலர்களிடம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.



Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2