நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரான செயல் - கோவையில் தண்ணீர் மனிதர் பேச்சு

 Tuesday, April 16, 2019  09:30 AM

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுவாணி விழுதுகள் இணைந்து இன்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் திரு.இராஜேந்தர் சிங் அவர்களுடன் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் சிறுவாணி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள சுனைகள் மற்றும் நீரோடைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

தற்போதைய நீர் பிரச்சனையை தீர்க்க கோவையில் நிலத்தடி நீரை பெருக்கவும், நீர் ஆதாரங்களை நிரப்பவும் முக்கிய ஆறாக விளங்கும் நொய்யல் ஆற்றினை மறுசீரமைப்பு செய்து அதனை ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுடன் ராஜேந்தர் சிங் கலந்தாய்வு நடத்தினார்.

நொய்யலின் கிளை நதிகளின் வழித்தடங்களில் காலத்தின் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும், அதனை எப்படி உயிரோட்டமான நீரோடையாக மாற்ற செயல் படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

கடந்த ஆண்டு கேரளாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 100 சதவீதம் மழை பெய்யும்போது, நொய்யல் ஆறு பெய்யும் பகுதிகளில் வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்து மழைக்காலத்தின்போது மட்டுமே தண்ணீர் செல்கிறது. நொய்யல் ஆறு பாயும் பகுதிகளை பசுமையாக்க வேண்டும். பொதுவாக ஆறுகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடுகிற ஆற்றை நடக்க வைக்க வேண்டும். நடக்க வைத்ததை தவழ வைக்க வேண்டும். தவழ வைப்பதை நிற்க வைக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.


Vanavil NEw2
இதற்கு நொய்யல் ஆறு பாயும் பகுதிகளில் தடுப்பணைகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும். கான்கிரீட்டினால்தான் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்தந்த பகுதிகளில் உள்ள கல், மண்ணை பயன்படுத்தி தடுப்பணைகளை கட்டலாம். இதன் மூலம் நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் மாலை 4-மணிக்கு பீளமேடு ராக் (RAAC) அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஆலோசனை கூட்டத்தில் நீர் நிலைகாக்க தன்னார்வலர் பணியில் ஆர்வம் காட்டிவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுவாணி விழுதுகள் மற்றும் பொதுமக்கள் உடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் எப்படி தான் புத்துயிரும் கொடுக்கப்பட்டது என்ற விளக்கத்தையும் நொய்யலை புத்துயிர் பெற நாம் செய்ய வேண்டிய ஆக்கபூர்வ பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் கலந்தாய்வு கூட்டத்தில், நொய்யல் ஆறு மற்றும் நீர்நிலைகளை காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராஜேந்தர்சிங் விளக்கி கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை துணைத்தலைவர் இளங்கோவன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மணிகண்டன், சிறுவாணி விழுதுகள் அமைப்பை சேர்ந்த சக்திவேல் உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராஜேந்தர் சிங் கூறியதாவது:-

நதிகளை இணைப்பது இயற்கை முறைக்கு எதிரானதாகும். நதிகள் இணைப்பு சாத்தியமாகக்கூடாது. நதிகள் இணைப்பு என்பது சூழலியல், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக முடியும். நதிகளை இணைப்பது மிகப்பெரிய குற்றம். மனித உடல்களில் வெவ்வேறு ரத்த வகைகள் இருப்பது போல், ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதனால் அந்த நதிகளை இணைப்பதற்கு பதிலாக அவற்றை உயிர்ப்பிக்க வேண்டும் என ராஜேந்தர் சிங் கூறினார்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2