தேர்தல் பாதுகாப்புப் பணி: போலீஸார், துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு


Source: dinamani
 Tuesday, April 16, 2019  09:09 AM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வால்பாறையில் போலீஸார், துணை ராணுவப் படையினர் திங்கள்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.

வால்பாறை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வால்பாறை நகரில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில், காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற அணிவகுப்பில் துணை ராணுவத்தினர், போலீஸார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.

சூலூரில்:


Vanavil New1
சூலூரில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தை கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். பேண்டு வாத்தியங்கள் இசையுடன் சூலூர் போலீஸாரும், ஆயுதங்களுடன் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரும் அணிவகுத்து சென்றனர். இந்த ஊர்வலமானது சூலூர் பேருந்து நிலையம், கலங்கல்பாதை, மார்க்கெட் சாலை ஆகிய முக்கிய பகுதிகளின் வழியாக சென்றது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில்:

மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார், துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காரமடை, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் மார்க்கெட் வழியாக வந்து கோவை சாலையில் இடையே உள்ள எஸ்.வி.டி நகரில் முடிவடைந்தது. இதேபோல மேட்டுப்பாளையத்தில் ஓடந்துறை பாலத்தில் தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பெரிய பள்ளிவாசல், காந்தி சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

காவல் ஆய்வாளர்கள் சென்னகேசவன் (மேட்டுப்பாளையம்), பாலசுந்தரம் (காரமடை), இளங்கோவன்(சிறுமுகை), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பங்கேற்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2