வாக்களிக்க இன்னும் 2 நாட்கள்; பூத் சிலிப் வினியோகம் ஜரூர்

 Tuesday, April 16, 2019  06:00 AM

வாக்களிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் மக்களுக்கு பூத் சிலிப் வினியோகம் சூடுபிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில், பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணியை, விரைந்து முடிக்க கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:


Vanavil New1
கோவை மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, 29,02,510 வாக்காளர்களுக்கு, போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பூத் சிலிப்புகள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் வரை, 12,23,000 வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.

பூத் சிலிப்புகளை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன், வாக்காளர் அல்லது குடும்பத்தில் உள்ள, 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினரிடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. பணியை விரைந்து முடிக்க, அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள், தங்கள் பகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து, பூத் சிலிப்புகளை பெற்றுக் கொண்டு, தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2