முட்டை பாஸ்தா செய்வது எப்படி?

 Monday, April 15, 2019  07:30 PM

சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு சமையல் வகை / ரெசிபி வகை : முட்டை உணவுகள் சாப்பிடும் நேரம் : மதிய உணவு

உங்கள் சுவையை தூண்டும் எக் பாஸ்தா சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான எக் பாஸ்தா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

பாஸ்தா - 2 கப்
தக்காளி - 1/4 பாகம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - 1/4 பாகம்


கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

உணவு செய்முறை : எக் பாஸ்தா

Step 1.

முதலில் அபாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

Step 2.

முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.







Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyal_media_Right1
Noyyalmedia_right2