44 வாரங்களை எட்டிய Target Zero-வின் பிளாஸ்டிக் அகற்றும் களப்பணி

 Monday, April 15, 2019  03:30 PM

ஆழியார் முதல் வால்பாறை வரையிலான வன சாலையில் கடந்த 43 வாரங்களாக வனப்பகுதிகளில் மற்றும் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் Target Zero இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர். நேற்று 44-வது வாரமாக வால்பாறை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து Target Zero பாலகுமாரன் அவர்கள் கூறியதாவது..

டார்கெட் ஜீரோ குழுவின் தொடர்ச்சியாக நடைபெற்ற 44வது களப்பணி ஆழியார் சோதனை சாவடி யில் இருந்து சின்னாறு வரையிலான இடங்களில் உள்ள பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில், மது பாட்டில்கள் சுமார் 8 பைகளில் சேகரித்து அகற்றினோம்...

இன்றைய களப்பணியில் தோழர்களுடன், என் பயண தோழர்களும் இணைந்து தூய்மைப்படுத்தினார்கள்,, மேலும் கடலூரில் இருந்து செல்வம், இயற்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு செய்து வாழும் ஒர் மனிதனுடன் இணைந்து களப்பணியாற்றியது மன மகிழ்வை தந்தது...

Vanavil New1

அவருடன் பேசும் பொழுது அடைபட்ட பல கதவுகள் திறக்கிறது... நாம் நினைத்த பலவற்றின் இன்னொரு பரிமாணத்தை அவரின் பேச்சில் இருந்து தெரிந்தது....

என் பயண தோழர்கள் எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் சிரத்தையுடன் எங்களுடன் இணைந்து பணியாற்றினார்கள் இதில் அவர்களின் புதல்விகள் சிறிதளவு கூட ஓய்வு இல்லாமல் பணியாற்றி வியப்பை தந்தார்கள்....

நல்லதை நினைத்து செய்தால் இந்த உலகத்தில் எதோ ஒரு மூலையில் இருக்கும் நல்ல உள்ளங்கள் எல்லாரும் ஒரே நேர்கோட்டில் இணைவார்கள் என்பது நிதர்சனமான உண்மை...

இன்றைய நாள் மனநிறைவை தந்தது... இனியும் தொடர்ந்து பயணிப்போம் இதே போல் அதே உற்சாகத்துடன் இலக்கை அடையும் வரை...


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2