சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்....

 Monday, April 15, 2019  03:30 PM

தீபாவளி என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது இனிப்பு பலகாரம் தான். முதலில் நமக்கு நினைவில் நிற்பது லட்டு, ஜாங்கிரி போன்றவைதான். அப்படிப்பட்ட தனி கவனம் பெற்றுள்ள ஜாங்கிரி செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
உணவு நிறமி (ஃபுட் கலர்) - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்


எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.

இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார். இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Website Square Vanavil2
Noyyal_media_Right1