சொந்த செலவில் மரம் நடும் நடமாடும் அசோகர் செல்வகுமார்... மக்கள் போற்றும் சபாஷ் மனிதர்!

 Saturday, July 1, 2017  10:00 AM

இயற்கையை பாதுகாக்க மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த செல்வகுமார்.

வாரத்தின் 5 நாட்களில் வேலை, வார விடுமுறைகளில் சினிமா, ஓட்டல் என்று சம்பாதித்த பணத்தை ஜாலியாக செலவு செய்வது. இது தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் தனி அடையாளத்தோடு இருக்கிறார் கோவையைச் சேர்ந்த செல்வகுமார்.


திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் செல்வகுமார் வார விடுமுறையானால் செய்யும் வேலையைக் கேட்டால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கத் தோன்றும்.

சனி, ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருக்கும் செல்வகுமார் சுமார் 100 பாக்கெட்டுகளைக் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு அதில் மரக்கன்றுகளை சுமந்து சென்று பல்வேறு தரப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Related Post


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup