இன்றைய தினம் -- ஏப்ரல் 14

 Sunday, April 14, 2019  04:30 AM

அம்பேத்கர் பிறந்த தினம்

அம்பேத்கர் ஜெயந்தி (Ambedkar Jayanti) ஒவ்வொரு ஆண்டும் பாரத் ரத்னா முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1891ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பாபா சாகேப் பிறந்தார். அனைத்து இந்திய மாநில மற்றும் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு இது ஒரு பொது விடுமுறை நாளாகும். இந்நாளில் வழமையாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் புது தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழமையாக உள்ளது.

உலக சித்தர்கள் நாள்

உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

1907 – எம். ஆர். ராதா, தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979) பிறந்த தினம்

1913 – என். ஆர். தியாகராசன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969) பிறந்த தினம்

1950 – ரமண மகரிசி, தமிழக ஆன்மிக குரு, மெய்யியலாளர் (பி. 1879) நினைவு தினம்


Vanavil New1
2013 – P.B,ஸ்ரீனிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930) நினைவு தினம்

1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.

1890 – அமெரிக்க நாடுகள் அமைப்பு வாசிங்டனில் அமைக்கப்பட்டது.

1944 – மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1981 – கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பறப்பை முடித்துக் கொண்டது.

2003 – மனித மரபணுத்தொகைத் திட்டம் நிறைவடைந்தது.

2010 – சிங்காய் நிலநடுக்கம், 2010: 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்படட்தில் 2,700 பேர் உயிரிழந்தனர்.Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2