திருமணத்தில் முக்கியத்துவம் பெரும் மணமாலை

 Saturday, April 13, 2019  10:43 AM

திருமணத்தில் மாங்கல்யம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதற்கு நிகரான முக்கியத்துவத்தை மணமாலை பெறுகிறது. மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மாலை அணிவிக்கும்போது தனது பாதி ஆன்மாவை பகிர்ந்தளிப்பதாக கருதப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மணமாலைகள், இன்று எவ்வாறு வடிவமைக்கப்படுகின் றன, எந்த வகையான பூக்களைக்கொண்டு கட்டப்படுகின்றன என பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தார்கள், சென்னையில் உள்ள `பா வெடிங் ஃப்ளவர் டெகார்’ நிறுவனத்தின் உரிமையாளர் அனுராதா மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ‘மார்க் 1 டெக்கர்ஸ்’ திருமண ஒருங்கிணைப்பாளர் சக்தி.

லோட்டஸ் மாலை, நெட் மாலை, ரோஸ் பெட்டல்ஸ் மாலை, ஸ்ட்ராபெர்ரி பெட்டல்ஸ் மாலை, மல்லிகை மாலை, ஆர்டினரி மாலை, ஆர்ட்டிஃபிஷியல் மாலை, வாடாமல்லி மாலை, சம்பங்கி மாலை, ஏலக்காய் மாலை, சந்தன மாலை, நந்தியா பூ மாலை, கார்நேஷன் மாலை, ஜெர்பெரா மாலை என மாலையில் பல வகைகள் உள்ளன.

முன்னர் எல்லாம் இந்திய மலர்களான மேரிகோல்டு, வாடாமல்லி, மல்லிகை, சம்பங்கி, அனைத்து வகையான ரோஜாக்கள், முல்லை, அரளிப்பூ போன்றவற்றைக்கொண்டு மட்டுமே மாலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது பிங்குஷன், டுலிப்ஸ், ஹைட்ரென்ஷியா, ஹைப்பேரிகம், லாக்ஸ்பெர், லிசான்தியஸ் கிரிபே, பிங்ஃபாம், அல்போ மேரியா, ஆர்க்கிடா பூ, மோக்காரா என பல வகையான வெளிநாட்டு மலர்களைக்கொண்டும் மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப் படும் பூக்கள் 20 முதல் 25 நாட்கள் வரை பொலிவுடன் காணப்படும்.

Vanavil New1

அனைத்து மலர்களும் இயற்கையானவையே என்பதால், சாயம் பயன்படுத்துவதில்லை. ஆர்டிபிஃஷியல் மலர்கள், மணமக்கள் விரும்பினால் பயன்படுத்தப்படும். மேலும் பச்சை நிறத்துக்கு பாம் லீவ்ஸ், ட்ரிவினியா லீவ்ஸ், லெதர் லீவ்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வாழை நார்களைத் தவிர்த்து கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் வயர் போன்றவற்றை கொண்டு பூக்களைக் கட்டுகிறோம். இம்மாலைகளை ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து தயாரிப்பர். பொதுவாக ஒரு மாலை தயாரிக்க 5 முதல் 8 மணி நேரம் தேவைப்படும்.

தனித்துவமான டிசைன்கள், மணமக்களின் ஆடைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு என்று தயாரிக்கப்படும் மாலைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தற்போதைய ட்ரெண்ட், ரோஜா இதழ்கள் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் பெட்டல்ஸ் மாலை. தென் இந்தியாவில் பெரும்பாலான திருமணங்களில் சம்பங்கி, மேரிகோல்டு போன்ற மாலைகளையும், ரிசப்ஷனுக்கு ரோஸ் பெட்டல்ஸ் மாலையையும் விரும்புகின்றனர்.

வட இந்தியாவில் எளிமையான மாலையை விரும்புகின்றனர். அதாவது ஒரே ஒரு பூவை, குறிப்பாக முழு ரோஜாவை மட்டும் பயன்படுத்தி செய்த மாலை. திருமணங்களில் பொதுவாக மண மகள் உயரம் குறைவாகவும், மணமகன் உயரம் அதிகமாகவும் இருப்பார்கள் என்பதால், அதற்கேற்ப இருவரின் மாலைகளும் வேறு வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்டு, ‘மணமகளுக்கானது’, ‘மணமகனுக்கானது’ என்று குறிப்பிட்டும் டெலிவரி செய்யப்படும். திருமண மாலைகள் பூக்களின் வகை, தரத்தைப் பொறுத்து 5,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. மாலைகளைப்போலவே மணமக் களின் வாழ்க்கையும் எப்போதும் மலர்ந்திருக்கட்டும்!

- செ.சுகந்தி படம்: க்யூபிட் டேல்ஸ்


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2