கோவைக்கு சிறப்புசேர்க்கும் சூலூர் - ஒரு சுவாரஷ்ய வரலாறு

 Friday, April 12, 2019  09:30 PM  1 Comments

சூலூர் வரலாறு 2300 ஆண்டுகளுக்கு முன்னிலி ருந்து துவங்குகிறது. சூலூர் அகழ்வில் கண்டெடுக்க ப்பட்ட பழங்கால நாணயம் கி.மு.700ம் ஆண்டைச் சார்ந்தது.. அந்த அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ‘Sulur Dish’, கி.பி.100 ம் ஆண்டைச் சேர்ந்தது. இது தற்போது லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் (No:1935.4-19.15) வைக்கப்பட்டுள்ளது.கி.பி. 900 வரை சூலூர், ‘சூரலூர்’ என அழைக்கப்பட்டது.

ஆதித்ய சோழன் காலம் முதல் கி.பி.1400 வரை, அரியபிராட்டி நல்லூர்’ எனவும், பின் வந்த சுந்தரபாண்டியன் காலம் முதல், கி.பி.1800 வரை ‘சுந்தர பாண்டிய நல்லூர்’ எனவும் அழைக்கப்பட்டது. கி.பி.1800க்கு பின்னர், சூரனூர் எனவும், பின்னர் மருவி சூலூர் என அழைக்கப்படுகின்றது. சூரல் எனப்படும் ஒரு வகை கரும்பு அதிகமாக விளைந்ததால், சூலூர் என மாறியதாகவும் கூறப்படுகின்றது.

கி.பி. 900ல், ஆதித்ய சோழன் காலத்தில், சூலூரில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயத்திற்காக சூலூர் குளம் கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்ட கோவிலே அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் ஆகு‌ம்.கி.பி.13ம் நூற்றாண்டில், சுந்தரபாண்டியன் காலத்தில், சூலூர் குளம் விரிவுபடுத்தப்பட்டது.

கி.பி.15ம் நூற்றாண்டில், விஜயநகரபேரரசால், கட்டப்பட்டதே அருள்மிகு வெங்கட நாத பெருமாள் கோவிலாகும்.இக் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகு வழங்கப்படுகிறது. உலகில் உள்ள எந்த பெருமாள் கோவிலிலும் மிளகு பிரசாதமாக வழங்கப்படுவதில்லை. ..

வியாபாரி ஒருவர், சூலூர் காடுகள் வழியாக, பக்கத்தில் உள்ள நகரத்திற்கு ஒரு வண்டி நிறைய உணவுப் பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்று கொண்டிருந்தார்.சூலூருக்குள் நுழைந்தவுடன் இரவுப் பொழுது ஆனபடியால், பயணத்தை தொடர முடியவில்லை. எனவே நம் சூலூர் பெருமாள் கோவிலில் தங்கி , விடிந்ததும் பயணத்தை தொடர முடிவு செய்கிறார்.


Vanavil New1
கோவிலுக்கு வெளியே தூங்குவதற்கு ஆயத்தமாகிறார்.. அப்போது ஒரு ஏழை விவசாயி மிகத் தளர்ந்த நிலையில் பசி மயக்கத்துடன் கோவிலுக்கு வருகிறார். வியாபாரியிடம், தாம் பசியுடன் உள்ளதாகவும், ஏதாவது உணவு கொடுத்து உதவுமாறு வேண்டுகிறார்.வியாபாரிக்கு உதவ மனமில்லை. ஆகவே தம்மிடம் உணவு ஏதுமில்லை என்றும் வண்டியில் உள்ள மூட்டைகளில் மிளகு மட்டுமே இருப்பதாகவும் பொய்யுரைக்கிறார். ஏழை விவசாயியும் சரி எனக் கூறி சென்று விடுகின்றார்.
மறுநாள் காலையில் எழுந்த வியாபாரி பயணத்தை தொடர்வதற்காக, தனது வண்டிக்கு செல்கிறார். .

வண்டியில் இருந்த மூட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில் உணவுப் பொருட்கள் இருந்த மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டை களாக மாறியிருந்தது.வியாபாரிக்கு தன் தவறு தெரிந்தது. விவசாயியாக வந்தது இறை எனப் புரிந்தது.உடனே பெருமாள் சன்னதிக்கு ஓடிச் சென்று, தன் பிழையை மன்னிக்குமாறு அழுது, வேங்கடவனின் பாதத்தில் வீழ்கிறார்.
..
உடனே பெருமாள் வியாபாரிக்கு முன் தோன்றி, இக் கோவிலை புதுப்பிக்கும்படியும் அதுவே தாம் வியாபாரிக்கு அளிக்கும் மன்னிப்பு எனக் கூறி, அன்று முதல் இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிளகு பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி மறைகிறார்.வியாபாரியும் அவ்விதமே செய்கிறார். …பக்த கோடிகள் இக் கோவிலுக்கு காணிக்கையாக மிளகை அளிப்பது மிகவும் பலனளிக்கும்.

சூலூர் மசூதி 18ம் நூற்றாண்டில் திப்புசுல்தானால் கட்டப்பட்டதாகும்.சூலூர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1861.சூலூர் தபால் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1882.

சூலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1884 சூலூர் பஞ்சாயத்து போர்டு ஆரம்பிக்கப் பட்ட நாள் 30.8.1892. சூலூர் ஏர்போர்ஸ் தளம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1940. 1942 ஆகஸ்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ புரட்சியில் இத்தளம் சுதந்திர போராட்ட வீரர்களால் எரிக்கப்பட்டது.
பின் 1943ல் இத்தளம் புதுப்பிக்கப்பட்டது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


saravanan saravanan commented on 3 month(s) ago
migavum nanri friends ethu poonra thagavalkalu
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2