கோவையில் இயற்கையின் உண்மையான அழகை தரிசிக்க விருப்பமா? அப்போ நீங்க மேல்முடி போய்ட்டுவாங்க ....

 Friday, April 12, 2019  08:30 PM

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேல்முடி ரங்கநாதர் கோவில், கடல்மட்டத்திலிருந்து, 4100 அடிகளுக்கு மேல் உள்ளது. கோவையில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சின்னத்தடாகம், கோவனுார், பாலமலை வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சென்று கொண்டுள்ளனர். இயற்கை வளமும், மூலிகை செடிகளும், சுத்தமான காற்றும் நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள்.

இங்கு, ஆஞ்சநேயர், முருகன், சிவலிங்கம், சாய்பாபா, அம்மன், கருடாழ்வார், விநாயகர், சப்த கன்னியரை பக்தர்கள் வழிபடுகின்றனர். 1973ம் ஆண்டில் தான் கோவிலுக்கு சுவர் எழுப்பி, ஸ்தலம் அமைத்து, 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்முடி ரங்கநாதர் கோவில் பராமரிப்பு, பூசாரிகளை தேர்ந்தெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த, கோவில் வழிபாட்டு கமிட்டி, செயல்பட்டு வருகிறது. தற்போது, சின்னத்தடாகம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய உள்ளூர்களிலும், திருப்பூர், சென்னை என, வெளி மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது.

மேல்முடி பயணம் :

தமிழகத்தில் கோயமுத்தூரில் டிரெக்கிங் செல்ல ஓர் சிறந்த இடங்களில் இந்த மேல்முடியும் ஒன்று. ஆம் இயற்கையின் உண்மையான அழகை தரிசிக்க விரும்பினால் ஒருமுறை சென்றுவாருங்கள். இந்த மேல்முடி பயணம் ஓர் நீண்ட நெடிய பயணம் முதலில் நீங்கள் செல்ல திட்டமிடுவது ஓர் குழுவாக இருப்பது நல்லது. இந்த பயணம் கோயமுத்தூரில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து தொடங்குகின்றது (இதற்க்கு இன்னும் ஓர் வழி உள்ளது அது தடாகத்திலிருந்து தொடங்குகின்றது நீங்கள் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து செல்வது சிறந்தது).


Vanavil New1
முதலில் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் நீங்கள் மேல்முடி செல்ல விரும்புவதாக கூறி அனுமதி பெறவேண்டும் (உங்கள் நன்மைக்காக). அனுமதி கிடைத்தவுடன் உங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெரியநாயக்கன் பாளையத்திலையே வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் செல்ல திட்டமிடுவது நண்பகல் 12 மணிக்கு அப்புறம் தொடங்கினால் மாலை 6 மணிக்கு மேல்முடிக்கு சென்றடைவீர்கள் (இது நாங்கள் சென்ற நேரம் அதனால் கூறுகின்றேன்).

மலையில் நீங்கள் செல்லும் பொழுது கொசுக்கள் அதிகம் கடிக்கும் அதனால் ஒடோமாஸ் வாங்கிக்கொள்ளுங்கள் சரியான வழித்தடங்கள் இல்லாததால் சில நேரங்களில் நீங்களே உருவாக்க வேண்டியதிருக்கும் அதனால் நல்ல கூர்மையான கத்தி கொண்டுசெல்வது நல்லது. அதேபோல் அங்கு ஓர் இரவு தங்கவேண்டியதிற்கும் அதற்காக உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்வது உத்தமம் (அங்கு நீங்கள் சமைத்து சாப்பிடுமளவிற்கு தேவையான வசதிகள் உள்ளது ஆகையால் அரிசி,பருப்பு,காய்கறிகள் வாங்கி சென்றால் போதும்).

பின்னர் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மோசமாக இருக்கும் ஆகையால் உங்களை காத்துக்கொள்ள போர்வை, மெழுகுவர்த்தி, மற்றும் கை விளக்குகள் (torch light),வலி நிவாரணி போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். நீங்கள்இருசக்கர வாகனத்தில் சென்றால் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் உங்கள் வாகனங்களை விட்டுவிடுங்கள் பின்னர் அங்கிருந்து பாலமலைக்கு பேருந்து மற்றும் ஜீப் வசதி உள்ளது. பேருந்தில் சென்றால் பாலமலை அடிவாரத்திற்கு சென்று விடுங்கள் அங்கு ஜீப் வசதி உள்ளது ஓடுநரிடம் மேல்முடி செல்கின்றோம் என்று கூருங்கள் அவர் ஓர் இடத்தில் உங்களை இறக்கிவிடுவார் அங்கிருந்து உங்களது பயணம் தொடங்குகின்றது.

இதற்க்குமேல் உள்ள ஒவ்வொரு இடங்களையும் அனுபவித்து செல்லுங்கள். உங்களது பயணம் மேல்முடி கோவில்வரைக்குமே இந்த தகவல் உதவும் மேல்முடிக்கும் மேலே ஓர் சொர்க்கம் உள்ளது அதற்க்கு சரியான வழிகாட்டி இருந்தால் மட்டும் மட்டுமே தொடருங்கள் . (வழிகாட்டி இல்லையேல் தவிர்த்து விடுங்கள் அது உங்கள் உயிருக்கும் ஆபத்து).

அனுமதி பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 94439 34034, 99524 18568, 93456 22022.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2