கோவையில் முதல் உணவு வீதி: இந்தப் பொறப்புதான் ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது

 Friday, April 12, 2019  04:30 PM

இந்தப் பிறவியே ருசித்து உண்பதற்காக கிடைத்ததுதான் என்பார்கள், வாழ்வின் சுவை அறிந்தவர்கள். என்னதான் உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ருசித்துச் சாப்பிடத்தான் நம் மனம் ஏங்கும்.நல்ல உணவுக்காக தேடித் தேடி அலைந்தவர்களை நாம் அறிவோம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும் சுவையுடன் சாப்பிட வேண்டுமென்ற லட்சியத்துடனும் பலர் இருக்கிறார்கள். உணவின் ருசிதான் வாழ்வின் ருசி. வாழ்க்கையைக் கொண்டாடுபவர்கள், புதிய அனுபவங்களை விரும்புபவர்கள், உணவுகளையும் கொண்டாடுவார்கள். விலை எவ்வளவு ஏறினாலும், ஹோட்டல்களில் கூட்டம் குறையாததற்கு இதுவும் காரணமோ? புதிது புதிதாய் ஹோட்டல்களும், உணவு வகைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஒரு காலத்தில் விதம்விதமாக உண்டு மகிழ வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. கடந்த 10, 20 ஆண்டுகளில் உணவு ரசனை வெகுவாக மாறியுள்ளது.
விலை குறைந்த இடத்தில் சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் மாறி, விலை அதிகரித்தாலும் பரவாயில்லை, நல்ல, சுவையான உணவே வேண்டுமெனத் தேடிச்செல்லும் நிலை உருவானது. புத்தகக் கண்காட்சிகளில் சமையல் குறிப்பு புத்தகங்கள் பக்கம் எப்போதும் கூட்ட மிருக்கும். இன்னும், டிவி-யில் சமையல் நிகழ்ச்சிகள், யுடியூப்பில் புதிய சமையல் செயல்முறை விளக்கங்களும் மவுசும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாக மாறியதில், பல நாடுகளின் உணவுகளும் நம்மை நாடி வந்துள்ளன. அதேசமயம், நமது மண் மணம் மாறாத, அசல் பாரம்பரிய உணவு ரகங்களுக்கும் என்றென்றும் ரசிகர்கள்இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

தொழில் வளர்ச்சியும், விவசாயமும் மட்டுமே கொங்கு மண்ணின் அடையாளங்கள் அல்ல. ருசியான, வகைவகையான உணவு களும் கொங்கு மண்ணுக்கு உரித்தானவை.

கோவை சரவணம்பட்டி பகுதியில் செல்லும் போதே, உணவின் நறுமணம் நம்மை ஈர்த்தது. அங்கு சென்று பார்த்தபோது 'ஃபுட் ஸ்ட்ரீட் ஃபியஸ்டா' என்ற பெயரில் அமைந்திருந்தது கோவையின் முதல் உணவு வீதி. 'உலகின் சுவைகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில்' என்ற முழக்கத்துடனே இதை அமைத்துள்ளதாகக் கூறுகின்றனர் இந்த உணவு வீதி நிர்வாகிகள்.

நாளுக்கு நாள் உணவுப் பிரியர்களின் சுவையும், ஆர்வமும் மாறிக் கொண்டே வரும் சூழலில், மீண்டும் மீண்டும் ஒரே சுவையில், ஒரே வடிவில் இருக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டுச் சளித்துப்போனவர்களுக்கு, இந்தியா மட்டுமின்றி, பல நாட்டு உணவு வகைகள் ஒரே இடத்தில் என்ற வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த 'உணவு வீதி'.

ஒரே வீட்டில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஊத்தப்பம் பிடிக்கும், இன்னொருவருக்கு பரோட்டா பிடிக்கும், ஒரு குழந்தைக்கு ஃபலுடாவும், மற்றொரு குழந்தைக்கு ஜிகர்தண்டாவும் பிடிக்கும். இத்தனை பேருக்குமான உணவுகளைக் கொண்டாட வந்துள்ளது 'ஃபுட் ஸ்டீரீட் ஃபியஸ்டா'.

53 உணவகங்கள்

இங்கு மொத்தம் 53 உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. இதுவரை 15-க்கும் மேற்பட்ட உணவகங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள உணவகங்களும் விரைவில் தொடங்கப்பட்டுவிடும் என்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளின் உணவு வகைகளும் இங்குண்டு. ஒவ்வொரு உணவகமும் தனித்துவமும், தனிச்சுவையும் கொண்டவை. ஏனெனில், ஒரு உணவகத்தில் கிடைக்கும் உணவு, மற்றொரு உணவகத்தில் கிடைக்காது.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள், சீனா, இத்தாலி, பர்மா, அரபு நாடுகளின் கான்டினென்டல் உணவு வகைகள் என, நாவுக்குச் சுவை கூட்டும் சைவம், அசைவம் இரண்டுமே இங்குண்டு.

Vanavil New1

ராஜஸ்தான், அஸாம் உள்ளிட்ட பகுதிகளின் டீ மற்றும் காபி, எகிப்து பிரியாணி, அரேபியன் கபாப்கள், பீட்ஸா, சாண்ட்விச், வெரைட்டி தோசைகள், மீன் உணவுகள், பாரம்பரிய நொறுக்குத் தீனிகள் என அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் உணவுகள் வரிசையாய் காத்திருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட், மில்க் ஷேக், ஜூஸ், ஐஸ்கிரீம் வகைகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக, ஸ்டோன் மற்றும் ரோல் வகை ஐஸ்கிரீம்கள் குழந்தைகளை வெகுவாக கவர்கின்றன.

ஆரோக்கிய உணவு

இப்போதெல்லாம், ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நமது பாரம்பரிய உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, சிறு தானியங்கள், கீரைகள், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளுக்கான 'மில்லட் கஃபே' இங்கு அமைக்கப்பட்டு வருகிறது. சில நாட்களில் இந்த பாரம்பரிய உணவகம் திறக்கப்பட்டு விடும். கால ஓட்டத்தில் நாம் மறந்து விட்ட மரபு உணவுப் பிரியர்களுக்காக சிறுதானிய இட்லி, தோசை, புட்டு, பணியாரம் உணவுகளும், சத்துமிக்க சிற்றுண்டி வகைகளும் சுத்தமாகவும், சுவையாகவும் கிடைக்கும் என்கிறார்கள்.

என்னென்ன வசதிகள்...

இந்த ஃபுட் ஸ்டிரீட் ஃபியஸ்டாவில் சுமார் 50,000சதுர அடியில், கார் பார்க்கிங், குழந்தைகளுக்கான பூங்கா, பொழுதுபோக்கு விளையாட்டுகள், லண்டன்
பஸ், டாய் டிரெயின், குழந்தைகள் கொஞ்சி விளையாட வாத்து, முயல் போன்ற செல்லப் பிராணிகள்,பெரிய திரையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஓபன் தியேட்டர் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான `ஷாப்பிங் ஸ்டிரீட்டும்' உள்ளது என்கிறார் இந்த உணவு வீதியின் நிர்வாகி எம்.எம்.ஸ்ரீதர்.

`குடல் குழம்பும், இட்லியும்`தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காம்பினேஷன்களுள் ஒன்று 'குடல் குழம்பும் இட்லியும்'. ஆவி பறக்கும் முல்லைப்பூ இட்லியில், கொதிக்க கொதிக்க குடல் குழம்பை ஊற்றிச் சாப்பிடுவது பேரனுபவமாக இருக்கும். கிராமத்து முறைப்படி கையால் அரைத்த மசாலா சேர்த்து சமைக்கப்பட்ட குடல் குழம்பு, கொஞ்சம் அதிகமான இட்லிகளை வயிற்றுக்குள் அனுப்பும்.

ஆட்டுக் குடல் நமது ஆரோக்கியத்துக்கு நல்லது. . பாரம்பரிய, சுவையான குடல் குழம்பை வீட்டில் செய்வது கொஞ்சம் சிரமம். ஏனெனில், அதை சுத்தம் செய்ய அதிக நேரமாகும் மற்றும் சிரமம் என்பதே காரணம். குடல் குழம்பு பிரியர்களின் நீண்ட நாள் ஏக்கத்துக்கு தீர்வாக இங்கு அமைந்துள்ளது
'வேலன் குடல் குழம்பும் இட்லியும்' உணவகம். சுத்தமாகவும், பாரம்பரிய முறைப்படியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் சேர்க்கப்படாமல் கிராமிய முறைப்படி கையால் அரைக்கப்பட்ட மசாலாக்களை சேர்த்து உருவாக்கப்படுவதால் இதன் சுவையே தனிதான்.

ADDRESS :

No 174, Thudiyalur Rd,
Chitra Nagar, Saravanampatty,
Coimbatore, Tamil Nadu 641035


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2