சிறப்புமிக்க கிணத்துக்கடவு முத்துமலை முருகன் கோவில்

 Friday, April 12, 2019  03:57 PM

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக்கடவுளான சிவன் –பார்வதி தம்பதியகளுக்கு மகனாக அவதரித்தார். சிவபெருமான் தனது மூன்றாக கண்ணிலிருந்து நெருப்பினை வெளியிட அதை வாயு பகவான் சரவணப் பொய்கை ஆற்றில் மிதக்கவிட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாயின. அந்த ஆறு குழந்தைகளை எடுத்து கார்த்திகை பெண்கள் வளர்த்து பின்னர் பார்வதிதேவி ஆறுகுழந்தைகளையும் ஒருசேர அணைத்து ஆறுமுகன் முருகன் தோன்றியதாக இந்து சமய நூல்கள் கூறுகின்றன.

இன்று நாம் அறியப்போகும் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு முத்துமலை முருகன் கோவில் ஆகும். சிறிய குன்றின் மீது மிகவும் அழகான முறையில் கட்டப்பட்டத் கோவில் சுமார் 500 வருடம் பாரம்பரியம் கொண்டது. இங்கு வந்து வழிபட மனம் அமைதி கிடைக்கும். நல்ல மனைவி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி, அன்னதானம் செய்து பூர்த்தி செய்கின்றனர்.

மயில் மீது முருகன் உலகைச் சுற்றி வர செல்லுகையில் அவர் கிரீடத்தில் இருந்த முத்துமாலை இந்த இடத்தில் விழுந்தபின்னர் முருகபெருமான் தனது திருவடிகளை இந்த இடத்தில் பதித்து முத்துமாலை எடுத்து சென்றதால் இந்த தலத்து இறைவனுக்கு முத்துமலை முருகன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த பகுதியில் வசித்த சிறுமியின் கனவில் முருகன் தோன்றி இங்குள்ள தொடர்ச்சியாக மூன்று காரைச் செடிகளின் கீழே முருகபெருமான் சிலையாக இருப்பதாக கூறினார். இதை இப்பகுதி பெரியவர்களிடம் கூற அவர்கள் அதை அசட்டையாக விட்டு விட்டனர். தொடர்ந்து மூன்று கிருத்திகை தினத்தன்றும் கனவில் முருகன் வந்து மீண்டும் மீண்டும் இந்த செய்தியைக் கூற, இந்த சிறுமியே அந்த இடம் சென்று மூன்று காரைச் செடிகளின் கீழே இருந்த வேலை எடுத்து பெரியவர்களிடம் தர அவர்கள் முதலில் வேலை அந்த இடத்தில் ஊன்றி பூஜை செய்ய ஆரம்பித்தனர். நாளடைவில் அனைவரும் பங்கேற்று நிதி திரட்டி கோவிலை எழுப்பினர். மலை மீது படிகளில் ஏறித்தான் இங்கு செல்ல முடியும். இந்த கோவிலின் அருகே உள்ள புற்றில் ஒரு சிறப்பு அம்சமாக இரவு நேரத்தில் ஒரு ஒளி வீசுவது அதிசயமாக உள்ளது என்கின்றனர். விநாயகர், நாகர் சன்னதி, வெள்ளியங்கிரி ஆண்டவர் என்று தனி தனி சன்னதிகள் உள்ளன. தைப்பூசத்தன்று வேலுடன் உள்ள இந்த முருகபெருமானை வழிபட்டால் அனைத்து வளமும் பெற்று, வினைகள் நீங்கும் என்று நம்புகின்றனர்.

இக்கோவில் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்துள்ளது. மலை மீது உள்ள கோவில் என்பதால் அழகாக நிமிர்ந்து உள்ளது. அறுபடை வீடுகளில் போன்றே மலைமீது அமைந்துள்ள முருக தலங்கள் பிரசித்தி பெற்றவைகளாகவே உள்ளது. மேலும் இது கேரளா எல்லையின் அருகில் உள்ளதால் அதன் செழிப்பும் எழிலும் சேர்ந்து காட்சி தருகிறது.

Vanavil New1

இங்கு முக்கிய விழாக்களாக தைப்பூசம், மாத கிருத்திகை, பங்குனி உத்திரம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், காவடி ஆட்டம், அன்னதானம் ஆகியவைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

அருள்மிகு முத்துமாலை முருகன் திருக்கோவில்
முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் – 642 109.

(கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் முத்துக்கவுண்டனூர் உள்ளது)


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2