சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

 Thursday, April 11, 2019  07:30 PM

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த செட்டிநாடு மிளகு நண்டு குழம்பை செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 25 கிராம்
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
இஞ்சி - சிறிது
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 3 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
நல்லெண்ணெய் - குழிக்கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :


Vanavil New1
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு

செய்முறை :

* நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

* பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும்.

* அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

* பச்சை வாசனை போனவுடன் இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு ரெடி.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2