என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!


Source: toptamilnews
 Monday, April 8, 2019  01:56 PM

இளமையாக இருக்க

நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை!
வாரந்தோறும் வயசாகிறது என்றாலும்,சில உணவுகள் முதுமையை இரு கரம் நீட்டி அழைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா! இவற்றை முடிந்தவரை விலக்கிவைத்தால், முதுமை உங்களை அனுக யோசிக்கும்.

பிஸ்கட்டுகள்

உங்கள் வீட்டுச் சமையலில் கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்தாமல் உஷாராக இருக்கலாம்.ஆனால்,அடுத்த முறை பிஸ்கட்டுகள் வாங்கும்போது அதில் உள்ள சேர்மானங்கள் படியுங்கள்.அந்த பட்டியலில் ஹைட்ரஜனேட்டட் ஆயில் இருக்கிறதா என்று பாருங்கள்.அது கெட்ட கொழுப்பின் மாற்றுப்பெயர் என்று புரிந்துகொள்ளுங்கள்.சில பிராண்டுகளில் மிகச் சிறிய எழுத்துகளில் அடிப்பக்கத்தில் போட்டிருப்பார்கள்,கவனம்!.

பால் பொருட்கள்

பால்,கிரீம்,பனீர்,சீஸ் போன்ற பொருட்களை முடிந்தவரை தவிர்ப்பது நலம்,இவற்றில் கெட்ட கொழுப்பு இருப்பதுடன் இவை, சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.முகம் முன் கைகளில் கரிய நிற திட்டுக்கள் ஏற்படும்.முகத்தில் ஒளி குன்றும்

இறைச்சி

மாட்டிறைச்சி,பன்றி இறைச்சி போன்றவை சுவையாக இருந்தாலும்,அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் தேவைப்படும்.கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இவற்றை உண்ண வேண்டும். இல்லா விட்டால் இது உங்கள் கொலஸ்ட்ரால் லெவலை உயர்த்திவிடும்.

உருளை கிழங்கு ஃபிங்கர் ஃபிரை


Vanavil New1
நாக்குக்கு ருசிதான் என்றாலும், உருளை கிழங்கு ஃபிங்கர் ஃபிரையில் உப்பு அதிகம்.வீட்டில் சாப்பிட்டாலும் ஓட்டலில் சாப்பிட்டாலும் உங்களுடைய அடுத்த நாள் உழைப்பைக் கெடுத்துவிடும்.அதிக தண்ணீர் குடித்து விட்டு,அடிக்கடி ரெஸ்ட் ரூமுக்கு ஓடிக்கொண்டு இருக்கவேண்டி வரும்.கண்ணுக்கு கீழ் கருவளையங்களை உண்டாக்கும்.

சரக்கு

சரக்கடிப்பதால்,உங்கள் உடலில் நீர்சத்து குறையும்.அதனால் உங்கள் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு முதிய தோற்றம் ஏற்படும். மது உங்கள் ஈரலுக்கு கடும் நெருக்கடி கொடுப்பதால் அதன் தினசரி வேலையான இரத்தத்தை சுத்திகரிக்கும் பனி தடைபட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

பொரித்த தின்பண்டங்கள்

பொரித்த உணவு வகைகள் சுவையானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால்,பொரிக்க பயன்படுத்தும் எண்ணெய்களில் கெட்ட கொழுப்பு டன் கணக்கில் இருப்பதால், இது உடல் எடையை கூட்டி தொப்பை விழ வைக்கும்.உங்கள் உடல் இயக்கத்தின் வேகம் குறைந்து வயதான தோற்றம் ஏற்பாட்டு விடும்.

குளிர் பானங்கள்

எல்லா கோலாக்களிலுமே பாஸ்பரிக் அமிலம் இருக்கிறது. அது உங்கள் பற்களில் இருக்கும் எனாமலை அரித்துவிடும்.ஒளிவீசும் பற்கள்தான் இளமையின் அடையாளம்.இரண்டு பற்கள் போய்விட்டால் நீங்கள் பெருசுதான்.

பால் பவுடர்

காஃபி,டீ போன்றவற்றுக்கு பால் பவுடர் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். இவற்றில் உள்ள கெட்ட கொழுப்பு உங்கள் இரத்தக் குழாய்களின் உட்புறம் படிந்து ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.இதனால் உடல் தளறும்.அப்புறமென்ன அங்கிள்தான்;ஆன்டிதான்.

பாப்கார்ன்

சினிமா இடைவேளையில் ஒரு பாப்கார்ன் மட்டும் போதும் என்பவரா நீங்கள். அதுவும் நவீன திரைப்பட அரங்கில் வெண்ணெய் சேர்த்த, மைக்ரோ அவனில் வறுத்த பாப்கார்ன் ரசிகரா நீங்கள், இன்றோடு இந்தப் பழக்கத்தை விடுங்கள். பாப்கார்னும் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பைக் கொண்டுவந்து சேர்க்கும் காரணிகளில் ஒன்று,மறந்துவிடாதீர்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2