மாலை வேளையில் சாப்பிட ருசியான வாழைக்காய் போண்டா செய்வது எப்படி!?

 Sunday, April 7, 2019  07:30 PM

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் டி.வி.பார்ப்பது,வெளியில் விளையாடுவது என்று பிசியாக இருப்பார்கள். இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது நொறுக்கு தீனி இருந்தால் சாப்பிடலாம் என்றும் ஆசை இருக்கும். வெய்யில் அதிகமாக இருப்பதால், எண்ணையில் பொரித்த தின்பண்டங்களையோ, ஜங்க் ஃபுட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை ஒரு போதும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

அது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆபத்தானவை. வீட்டிலேயே எளிமையான முறையில்,மாலை வேளையில் சாப்பிட ருசியான வாழைக்காய் போண்டா செய்து கொடுக்கலாம்.ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமுமாச்சு,அட்டகாசமான ஒரு ரெஸிபியை செஞ்சு பார்த்த மாதிரியுமாச்சு.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 3
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

Vanavil New1
பஜ்ஜி மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்
கருவேப்பிலை
கடுகு

செய்முறை:

வாழைக்காய் வேகவைத்து,தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும். பஜ்ஜி மாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும். இஞ்சியும் ,பச்சை மிளகாயையும் நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பின்னர் கறிவேப்பிலையை சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி மசாலாவை சேர்க்கவும். அத்துடன் மசித்து வைத்துள்ள வாழைக்காய், மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி பஜ்ஜி மாவில் நனைத்து பொரித்து எடுங்கள்... சுவையான மொறு மொறு வாழைக்காய் போண்டா ரெடி!


Vanavil NEw2



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2