சாகச சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்க பூமி ஹோர்ஸ்லி ஹில்ஸ்!!!

 Sunday, April 7, 2019  12:30 PM

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,265 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஹோர்ஸ்லி ஹில்ஸ். சாகச சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்க பூமி. மலைப்பாதை ஏறத் தொடங்கியவுடனே நெடுகிலும் அடர்ந்த காடும், யூகலிப்டஸ் தேக்கு மரங்களுமாக இயற்கையின் வசீகரம் நம்மை அன்போடு வரவேற்கிறது.

சாகச விளையாட்டுகளுக்காகவே இங்கே படையெடுக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ரிலாக்ஸ் பாயின்டாக ஹோர்ஸ்லி ஹில்சை தேர்ந்தெடுக்கின்றன.

இங்கே ஆந்திர மாநிலத் சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் ரிசார்ட்டும் உள்ளது. காட்டேஜ்கள், ஓட்டல்கள், ஹெல்த் கிளப், ஜிம், 300 பேர் அமரக்கூடிய கான்ஃபரன்ஸ் ஹால் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

ஸோர்பிங்:

டிரான்ஸ்ஃபரன்ட் பிளாஸ்டிக் கினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உருண்டையினுள் ஒருவர் அல்லது இரண்டு மூன்று பேர்கள் உட்கார வைக்கப்படுவார்கள். அதன்பிறகு மலைச்சரிவில் இருந்து இந்த உருண்டைகளை உருட்டி விடுவர். சுமார் அரை மைல் தூரத்திற்கு அந்த உருண்டைகள் பயணம் செய்யும்.

மலையேறுதல்:


Vanavil New1
மலையேறுபவர்கள் எந்தவிதமான சாதனங்களும் இல்லாமல் தங்களின் முயற்சியினால் மட்டுமே மலையேற்றத்தில் பங்கு கொள்ள வேண்டும். கற்பாறைகள், வழுக்குப் பாறைகள், செங்குத்தான பாறைகளில் ஏற வேண்டியதிருக்கும்.

பங்கி ரன்:

காற்றுப் பையினால் உருவாக்கப்பட்ட போர்டு ஒன்றில் நீங்கள் ஓடவேண்டும். உங்கள் முதுகில் பங்கி கயிறு கட்டப்பட்டிருக்கும். உங்களால் எவ்வளவு தொலைவு ஓட முடியுமோ அவ்வளவு தொலைவு ஓடிய பிறகு, அதாவது உங்கள் முதுகில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் கடைசி முனைவரை நீங்கள் ஓடிய பின்பு, அதே வேகத்தில் நீங்கள் பின்னுக்கு இழுக்கப்படுவீர்கள்.

ரேப்பெல்லிங்:

கயிறை மலையுச்சியில் கட்டிக்கொண்டு செங்குத்தாக கீழே இறங்க வேண்டும்.

ஹரிஸான்டல் லேடர்:

தரையில் இருந்து மூன்றடி உயரத்தில் ஆரம்பமாகும் இந்தத் தொங்கும் ஏணியில் நீங்கள் ஏற ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 அடி உயரமுள்ள இடத்தை அடைய வேண்டும்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2