மூணாரில் உள்ள பிரபலமான இடங்கள். (தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து)

 Saturday, April 6, 2019  06:30 PM

இந்தியாவிலே சிறந்த மலைவாசத்தலங்களில மூணார் ஒன்றாகும். இப்பகுதி முழுவதும் அதிகளவில் தேயிலை தோட்டங்களாலும், குன்றுகளான நிலப்பகுதிகளும், கண்களுக்கு கவரிச்சியூட்டக்கூடிய தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளதால் அனைவரும் விரும்பக்கூடிய மலைவாசஸ்தலமாக உள்ளது.

இந்த மூணாரில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தாலும், ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்காது. இங்கு ஜீன் முதல் செம்படம்பர் வரையிலும், பருவநிலையை விரும்பக்கூடியவர்களுக்கும் மூணார் சிறந்த இடமாக விளங்குகிறது. கேரளா சுற்றுலா மையத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மூணாரில் பிரபலமான இடங்களை பற்றி காண்போம்.

1. மூணார் : டாடா தேயிலை அருங்காட்சியகம்

நல்ல தண்ணீர் தோட்டம், மூணாரிலிருந்து 12கி.மீ தொலைவில் டாடா நிலையம் அமைந்துள்ளது. டாடா தேயிலை நிலையம் மூணாரில் பிரபலமான சுற்றுலா மையமாக விளங்குகிறது. உலகத்திலேயே சிறந்த தேயிலை தோட்டம் மூணாரில் உள்ள டாடா தேயிலை தோட்டம் ஒன்றாகும். உலகத்திலே தேயிலை விநியோகஸ்தர்களிலும், உற்பத்தி செய்வதிலும் இரண்டாம் இடம் வகிக்கிறது. இதனை கண்ணன் தேவன் தேயிலை நிலையம் என்றும் அழைப்பர். தேயிலை விரும்புகிறவர்களுக்கு வௌ;வேறு வகையான சுவையை தருகிறது.
குழந்தைகள் – 35ரூ,
வயது வந்தவர்கள் – 25ரூ, புகைப்படக்கருவி – 20ரூ,
தேயிலை – 100ரூ.

2. ப்ளோசம் பூங்கா

மூணாருக்கு அருகில் 3கி.மீ தொலைவில் ப்ளோசம் பூங்கா உள்ளது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த பூங்காவானது, பள்ளிவாசல் நீர்மின்சாரம் திட்டத்திற்கு மிக அருகில் உள்ளது. அரிய வகை பூவினங்கள் இந்த இடத்தில் உருவாக்குதல் மதிப்புமிக்க ஒன்றாகும். சறுக்கு விளையாட்டு, படகுசவாரி, ஆகியவை இந்த பூங்காவில் உள்ளது. இதன் பின்னணியில் தீ விளையாட்டுக்கள், இசை விளையாட்டுக்கள், நடைபெறுகிறது. இந்த பூங்காவின் அழகான இயற்கை வளங்களை பார்க்கும் போது வியக்கவைக்கிறது. இத்தகைய அழகினை கொண்ட இப்பூங்காவினை டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பார்வையிடுவதற்கு சிறந்த காலமாகும். இங்கு அழகான பூக்கள் மற்றும் பசுமையான புல்வெளிகளை உள்ளடக்கிய பூங்காவை புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாகவும், மூணாரில் சிறந்த பூங்காக்களில் இதுவும் ஒன்றாகவும் விளங்குகிறது.

3. கொழுகுமலை தேயிலை தோட்டம்

கொழுகுமலை தேயிலை தோட்டம் தேயிலை விரும்புகிறவர்களுக்கு இருப்பிடமாக விளங்குகிறது. உலகத்திலேயே தேயிலை தோட்டம் அதிகம் உள்ள இடமாகும். இந்;த தேயிலை தோட்டம் விதவிதமான நறுமணங்கள் வீசக்கூடியதாக காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வௌ;வேறு விதமான, சுவையான தேயிலை, தொழிற்மையத்தில் வாங்கி கொள்கின்றனர். இங்கிருந்து சூரியன் மறையும் அற்புதமான காட்சியை பார்க்கமுடியும்.

4. பொத்தNமடுவில் ஒரு உலாவுதல்

மூணாரிலிருந்து 6கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பார்க்ககூடிய பகுதிகள் முழுவதும் தேயிலை, காப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்து காணப்படும். இப்பகுதி முழுவதும் குன்றுகள் மற்றும் பசுமையான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள், நடைபயணம் மேற்கொள்பவர்களின் உடம்புக்கு புத்துயிர் அளிக்கிறது. மூணாரில் உள்ள தேயிலை தோட்டங்களில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. பொத்தNமடு பகுதி இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஓய்வு எடுக்கவும், பூங்காவினை சுற்றி உலாவுதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

5. ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி மூணார் மற்றும் பள்ளிவாசல் இடையே அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி உலக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கவர்ந்திழுக்ககூடிய இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. மூணாரிலிருந்து 2கி.மீ தொலைவில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி சுற்றிலும் அழகான மலைக்குன்றுகள், பசுமையான புல்வெளிகள் கொண்ட மலைகள் அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி மூணாரில் உள்ள சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குறுகிய மரத்தாலான பாலத்தை கடந்து இந்நீர்வீழ்ச்சியை அடைகின்றனர்.6. அழகான ஸ்டாப் ஸ்டேசன்

இந்த அழகான பகுதி கடல் மட்டத்திலிருந்து 1700மீ உயரத்தில் அமைந்துள்ளது. மூணாரில் உயர்ந்த இடமாக விளங்குகிறது. இது கண்ணன் தேவன் குன்றுகளின் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது தேயிலை பள்ளத்தாக்கை பார்க்கமுடியும். இங்கு நீலங்குறிஞ்சி தாவரம் இனங்கள் உள்ளன. இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள், மேற்குதொடர்ச்சி மலைகளை கொண்ட தேனி பகுதியை காணமுடிகிறது.

7. ~Pகாரா படகோட்டுதல் (குந்தலா ஏரி)

மூணாரிலிருந்து 21கி.மீ தொலைவில் ஏரி அமைந்துள்ளது. மூணாரை சுற்றி பார்க்கக்கூடிய இடங்களில் குந்தலா ஏரி சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த ஏரி நீர்மின்சார திட்டத்தின்கீழ், ஆசியாவிலே முதலாவது கட்டப்பட்ட பிரதானமான அணைக்கட்டாகும். இ;ங்குள்ள கா~;மீரி-~pகாரா படகோட்டுதல் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது. புகைப்படம் எடுக்கக்கூடியவர்கள் அதிகாலையில் இந்த பகுதிக்கு சென்று சூரிய ஒளிக்கதிர்கள் ஏரியின் மீது விழும் அற்புதமான காட்சியை எடுக்கலாம்.

8. மேட்டுபட்டி அணைக்கட்டு மற்றும் இ;ண்டோ-சுவிஸ் பால்பண்ணை

மூணாரிலிருந்து 12கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேட்டுபட்டி அணைக்கட்டு அழகான காலநிலைக்கு பெயர் பெற்றது. இங்குள்ள ஏரிகள், படகோட்டல் மற்றும் பல்வேறு விதமான செயற்பாடுகள் மூலம் பார்வையாளர்கள் மகிழ்;ச்சியடைகிறார்கள். மேலும் இண்டோ-சுவிஸ் பால்பண்ணை பார்க்ககூடிய இடங்களில் ஒன்றாகும். இங்கு அறிவியல் பூர்வமாக விஞ்ஞான முறையில் மந்தைகளை வளர்க்கின்றனர். இப்பகுதியை பார்ப்பதற்கு முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும். இங்கு 11 மந்தைகள் உள்ளன. அவற்றுள் 3 மந்தைகளை மட்டுமே பார்வையாளர்கள் காண முடியும்.

9.புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடம் (மூணார்)

போட்டோ பாய்ண்ட் இயற்கை அழகுகள் நிறைந்து காணப்படுவதால் போட்டோ ஜெனிக் பகுதி என்று அழைக்கப்படுகிறது. போட்டோ பாய்ண்ட் மூணாரிலிருந்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுவதும் தேயிலை மரங்கள், காப்பி, ஏலம், மிளகு ஆகியவை இப்பகுதியில் காணப்படுகின்றன. புகைப்படம் எடுப்பதற்கு மலைப்பகுதிகளில் இப்பகுதி ஒரு சிறந்த இடமாகவும், அற்புதமான சூழலையும் கொண்டுள்ளது.

10. இரவிகுளம் தேசிய பூங்கா(வரையாடு மான்) ஒரு பார்வை

இரவிக்குளம் தேசிய பூங்காவில் அரியவகை வரையாடு மான்கள் உள்ளன. இந்த பூங்காவானது 15கி.மீ தொலைவில் உள்ளது. 97சதுர கி.மீ பரப்பளவை கொண்டது. இப்பூங்காவில் சாம்பா மான், குள்ளநரிகள், இந்தியன் காட்டெருமை, விதவிதமான கிரிப்பிள்ளைகள் உள்ளன. ஐ.நா வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் இந்த அரியவகை வரையாடு மான்களை இந்த பூங்கா பாதுகாத்து வருகிறது. இப்பூங்காவில் 750 வரையாடு மான்கள் உள்ளன. இப்பூங்காவினை ஜீப் சவாரி செய்து பார்ப்பதைவிட, நடைபயணம் மேற்கொண்டு சுற்றிப்பார்ப்பது தனித்தன்மை வாய்ந்ததாகும். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும், ஏப்ரல் முதல் ஜீன் வரை இப்பூங்காவினை சுற்றி பார்ப்பதற்கு சிறந்ததாகும்.

11. மலையேறுதல் (லோகோகார்ட் கேப்)

மூணாரில் உள்ள சிறந்த இடங்களில் இந்த லோகோகார்ட் கேப் மலையேறுவதற்கு சிறந்த இடமாகும். மூணாரிலிருந்து 13கி.மீ தொலைவில் உள்ளது. இந்த லோகோகார்ட் கேப் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடிய பகுதியாக விளங்குகிறது. பசுமையான புல்வெளிகள், பள்ளதாக்குகள் மற்றும் அமைதியான தென்றலை விரும்பகூடியவர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. மலையேற்றத்திற்குரிய சிறந்த இடமாகவும், இந்த மலையேற்றத்தின் போது அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளை காணமுடியும்.

12. ஆனைமுடி சிகரம் (இரவிக்குளம் தேசியப்பூங்கா)

2695மீ உயரத்தில் உள்ள இந்த சிகரமானது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனைமுடி சிகரமானது இரவிக்குளம் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. இதனை தென்னிந்தியாவின் இமயமலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையேறுபவர்களுக்கு, மலையேறுவதற்கான வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று 2கி.மீ தூரம் வரை செல்லலாம். இப்பகுதியில் மலையேற வேண்டும் என்று விரும்பினால் வனத்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும். இந்த ஆனைமுடி சிகரம் மூணாரில் உள்ள சிறந்த இடங்களில் ஒன்றாகும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyalmedia_right2
Noyyal_media_Right1