குடகு மலை - ஓர் பார்வை

 Saturday, April 6, 2019  01:30 PM

எங்காவது காபிக் கொட்டைக் கடைகளைத் தாண்டும்போது, உங்கள் நாசித் துவாரங்களுக்கு ஒரு மயக்கம் கிடைக்குமே... கூர்க் எனும் குடகுமலைக்குள் நுழைந்ததுமே அந்த மயக்கத்தை அனுபவிக்கலாம். எந்நேரமும் இங்கு காபி வாசம் காற்றில் மிதந்துகொண்டே இருக்கும்.

கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அழகான மடிக்கேரி, குடகின் தலைநகரம். மலைக் கிராமங்கள் எல்லாவற்றிலும் காபிச் செடிகள் பதனிட முடியாது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலை வாச ஸ்தலங்களில் மட்டுமே காபிச் செடிகளைப் பதனிட முடியும். இங்கு எந்நேரமும் 20 டிகிரி குளிர் சில்லிட்டுக் கொண்டே இருக்கும். அடர்ந்த காட்டைப் போலவே மரங்களும், காபிச் செடிகளும், மலைகளும் நிறைந்த குடகு மலையில், விலங்குகள் பற்றிய பயம் வேண்டாம்.

ஆனால், அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளை ரகசியமாகப் பார்க்கலாம். சாகசம், த்ரில்லிங் எதுவுமற்ற குடகுமலைப் பயணம், அமைதியை விரும்புபவர்களுக்கு மட்டும் அழகான சாய்ஸ். குடகுமலையில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்தால், 50 கி.மீ தாண்டி தலைக்காவிரி வருகிறது. இங்குள்ள காவேரியம்மன் கோயில் குளத்தில் காசு எறிந்து வேண்டினால், கேட்டது கைகூடும் என்பது ஐதீகம். இங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது துபேர் யானைகள் கேம்ப். நமக்குப் பிடித்த யானையில் காட்டுக்குள் சவாரி செய்யலாம். மின்சாரம் இல்லாத துபேர் காட்டில் காட்டேஜில் தங்கலாம். சவாரிக்கு, ஆளுக்கு 1,000 ரூபாய். பக்கத்தில் இருக்கும் அபே அருவியும், இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

சென்னையில் இருந்து கிளம்பினாலும் சரி; கோவையில் இருந்து கிளம்பினாலும் சரி... மைசூருதான் மடிக்கேரிக்குச் செல்லும் ஒரே வழி. சென்னையில் இருந்து மைசூர் 500 கி.மீ. கோவையில் இருந்து 236 கி.மீ. மைசூரில் இருந்து மடிக்கேரி - 135 கி.மீ.

அமைதி விரும்பிகள் குடகுமலையில் தங்க மிகவும் விரும்புவார்கள். இங்கு இரண்டு விதமான தங்கும் வசதி உண்டு. ஹோட்டல்களில் ஏ.சி மற்றும் நான் ஏ.சி ரூம்கள், 1,200 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. காட்டேஜ்களிலும் தங்கலாம். இதில் ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணம். ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு 1,000 முதல் 1,200 ரூபாய். இரவு உணவும், காலை டிபனும் அதிலேயே அடங்கும். வீட்டுச் சமையல் என்பது கூடுதல் ப்ளஸ். அடர்ந்த காபி எஸ்டேட்களுக்கு நடுவே, பரந்து விரிந்த மைதானத்தில், சமைக்கும்போதே 'சில்’லென்று மாறும் சப்பாத்தி - சிக்கன் கறியும்கூட இங்கு ருசியாகவே இருக்கும்.

(மடிக்கேரியில் இருந்து)


Vanavil New1
தலைக்காவிரி - 43.4 கி.மீ.

Vanavil New1

அபே அருவி - 6 கி.மீ.

துபேர் யானைகள் கேம்ப் - 60 கி.மீ.

மல்லாலி அருவி - 57 கி.மீ

நாகர்ஹொலே நேஷனல் பார்க் - 87 கி.மீ

புஷ்பகிரி மலை - 62 கி.மீ


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2