தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ தூக்கமின்மைக்கான பாட்டி வைத்தியம்…

 Friday, April 5, 2019  09:30 PM

இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.

30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.

தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள்.

இதோ தூக்கமின்மையை விரட்ட பாட்டி வைத்தியம்…

1.. வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்.

Vanavil NEw2

2.. ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

3.. முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

4.. மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

5.. மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

6.. மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

7.. மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

8.. 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2