நொய்யலை காக்க தன்னார்வலர்கள் உறுதி!

 Wednesday, June 28, 2017  01:55 PM

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அனுபவ பகிர்வு கூட்டம் நடந்தது; அதில், நொய்யல் நீர் நிலை புனரமைப்புப் பணிகளுக்கு உதவிய பலரும் கவுரவிக்கப்பட்டனர்.கோவை, சுந்தராபுரத்திலுள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், 'ராக்' கவுரவ செயலாளர் ரவீந்திரன், 'சிறுதுளி' நிர்வாகி மணியன், அமெரிக்காவிலுள்ள டெக்சாஸில் பணியாற்றும் நம்பிராஜன், முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் கோபால்சாமி, புரவலர்கள் ஆல்பர்ட், ரமேஷ், கேமரூன் நிறுவனத்தின் ரவி, கவுசிகா நதி மீட்பு சங்க நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசியதாவது:

கோவையின் ஜீவ நதியான நொய்யலை காப்பதில் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும். நீர்நிலைகளில், பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல், மரம் வளர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.செங்குளம் துாய்மைப்படுத்தும் பணி முடிந்த பின், பேரூர் குளத்தை எங்களது பொறுப்பில் எடுத்து, கரைகளை பலப்படுத்துதல், குளத்தின் நடுவே, ஆங்காங்கே மண் மேடு அமைத்து, பறவைகள் தங்குமிடமாக மாற்றும் பணியும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, மணிகண்டன் பேசினார். இந்த பணிகளுக்கு உதவிய பலரும் கவுரவிக்கப்பட்டனர். தன்னார்வலர்கள் தியாகராஜன், ஆண்டனி, ரவி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Vanavil2
Website Square Ad spp3
Website Square Ad spp2
Website Square Vanavil 1