தகவல் துளிகள் - கோவை விரைவு ரயில் (Kovai Express)

 Sunday, March 24, 2019  05:30 PM

கோவை விரைவு ரயில், இந்திய இரயில்வேயினால் தினசரி செயல்படுத்தப்படும் ரயில்சேவையாகும். இது சென்னை சென்ட்ரல், கோயம்புத்தூர் சந்திப்பு ஆகிய நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் 14, 1977 இல் தனது முதல் பயணத்தினைத் தொடங்கியது. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படுவதன் மூலம் இந்தியாவின் விரைவு ரயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் இது தென்னக ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில்களில் ஒன்று. இது 12675, 12676 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படுகிறது.

இஞ்சின் :

ஈரோடு முதல் ராயப்புரம் வரை WAP4 இஞ்சினுடன் செயல்படும் இந்த ரயில், சிலவேளைகளில் மிகவும் சக்தி வாய்ந்த WAP7 இஞ்சினையும் பயன்படுத்துகிறது.

ஆரம்பத்தில் இதன் வண்டி எண் 75/76 ஆக இருந்து, பின்னர் 80 காலகட்டங்களில் 2675/2676 ஆக மாறியது. அந்த காலகட்டத்தில் ரயில் வண்டி எண் நான்கு இலக்கங்களில் இருக்க வேண்டும் என இந்திய ரயில்வே கூறியதே இதற்குக் காரணம். 2011 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல், ஐந்து இலக்க வண்டி எண்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டதால் கோவை விரைவு ரயிலின் வண்டி எண் மறுபடியும் மாற்றப்பட்டு 12675/12675 என்றானது.

சேவைகள் :

தினசரி செயல்படும் இந்த ரயில்சேவையில் குளிர்பதன வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள், அவையில்லாத சாதாரண ரயில்பெட்டிகள் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் உள்ளன. 12679 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் நகரங்களுக்கிடைப்பட்ட விரைவு ரயிலானது எதிர்வரும் வழிப்பங்கீட்டு ரயிலாகும்.

புறப்படும் நேரம் : சென்னை சென்ட்ரல் (MAS) - 06:15, கோயம்புத்தூர் சந்திப்பு (CBE) - 13:45 (497 கி.மீ)


Vanavil New1
வழித்தடம் :

--> சென்னை சென்ட்ரல் (MAS),அரக்கோணம் சந்திப்பு (AJJ),வாலஜா சாலை சந்திப்பு ,காட்பாடி சந்திப்பு (KPD),ஆம்பூர் (AB),ஜோலார்பேட்டை (JTJ),மொரப்பூர் (MAP),சேலம் சந்திப்பு (SA),ஈரோடு சந்திப்பு (ED),திருப்பூர் (TUP), கோயம்புத்தூர் சந்திப்பு (CBE)

வண்டி எண் 12676

இது கோயம்பத்தூர் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செயல்படுகிறது. 7 மணி நேரம், 30 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 10 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. மணிக்கு சராசரியாக 66 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 7 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. கோயம்பத்தூர் சந்திப்பு, சென்னை சென்ட்ரல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 93 ரயில் நிறுத்தங்களில் 10 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக நான்கு நிமிடங்கள் தாமதத்தினையும், வந்தடையும்போது சராசரியாக 18 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

L – SLR – UR – C1 – C2 – D1 – D2 – D3 – D4 – PC – D5 – D6 – D7 – D8 – D9 – D10 – D11 – D12 – D13 – D14 – UR – UR – UR – SLR

வண்டி எண் 12675

இது சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பத்தூர் சந்திப்பு வரை செயல்படுகிறது. 7 மணி நேரம், 30 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 9 நிறுத்தங்களில் நின்று செல்லும். மணிக்கு சராசரியாக 66 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 7 மணி நேரம், 30 நிமிடங்களில் கடக்கிறது. சென்னை சென்ட்ரல், கோயம்பத்தூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 93 ரயில் நிறுத்தங்களில் நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், வந்தடையும்போது சராசரியாக 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

L – SLR – UR – UR – D14 – D13 – D12 – D11 – D10 – D9 – D8 – D7 – D6 – D5 – PC – D4 – D3 – D2 – C2 – C1 – UR – UR – SLR


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2