கோவையில் மாடி வீடுகள் தோன்றிய வரலாறு

 Saturday, March 23, 2019  05:30 PM

கோவையில் ஆங்கிலேயர் வரும் வரைக்கும் அரண்மனைகளும், ஆலையங்களுமே உயரமாக இருந்தன. ஊரில் எல்லாம் ஓட்டுவில்லை வீடுகளாகவே இருந்தன. ஆங்கிலேயர் வந்தபிறகு முதலில் நான்கு மச்சு வீடுகள் தோன்றின.

1850–ம் ஆண்டுவரை இவைகளே மச்சு வீடுகள். பிறகே மற்ற மச்சு வீடுகள் தோன்றின. இந்நான்கு மச்சுவீடுகளும் நான்கு புறத்தில் இருந்தன. ராஜவீதி அக்ரஹாரத்தில் ஜாகீர்தாரர் வீடு என்பது ஒன்று. இதற்குப் பின்னால் ஒரு பழத்தோட்டம் இருந்தது. கோமுட்டி வீதியின் கீழ்க்கோடியில் ஆற்காடு தொப்பையப்ப முதலியார் வீடு மற்றொன்று. கோமுட்டி வீதி என்பது இப்போது வைஷியாள் வீதி என்றாகிவிட்டது.

Vanavil NEw2

மூன்றாவது ரங்கே கவுடர் வீதிக்கு பெயர் தந்த ரங்கே கவுடர் கட்டிய இரட்டை அடுக்கு வீடு. நான்காவது லிங்கப்ப செட்டியார் சுக்ரவாரப் பேட்டையில் கட்டிய வீடு. இது மிக விலை உயர்ந்த ஈட்டித் தூண்கள். தேக்கு விட்டங்கள் கொண்டு கட்டியது. இந்தச் செட்டியார் லிங்காயத்து மரபினர். பெரும் செல்வாக்குப் படைத்தவர். இவ்வீட்டில் தான் கோவை நகரசபைப் பள்ளி இருந்தது.

இந்நான்கு மச்சுவீடுகளே கோவைக்கு ஆதிகால மச்சு வீடுகள். அதற்குப் பிறகு மாடிவீடுகள் பல தோன்றின. மேலும், கோவையில் கி.பி. 1900 ஆண்டு வரை மூன்றடுக்கு மச்சுவீடுகள் இல்லவே இல்லை. அதன் பிறகு 50 ஆண்டுகாலத்தில் இரண்டொரு மூன்றடுக்கு வீடுகள் தோன்றின. இது தவிர முதன் முதலாய் மூன்றடுக்கு வீடுகட்டிய புண்ணிய வான்கள். அதனால் உபத்ரவம் ஏற்படும் என்று ஜோஸ்யர்கள் சொல்லக் கேட்டு மூன்றாம் அடுக்கை இடித்தே விட்டனர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2