சூலூர் அருகே கிரேன் மோதி தலை நசுங்கி பெண் சாவு

 Saturday, March 16, 2019  12:30 PM

சூலூர் அருகே கிரேன் மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.

கோவை, உப்பிலிபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (47). அதே பகுதியில் கட்டடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (47). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலையில் குமரன் கோட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.

Vanavil New1

அப்போது, அந்த வழியாக வந்த கிரேன் வாகனம், ஆறுமுகத்தின் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது, எதிரே கோவை நோக்கி வந்த பேருந்தின் மீது மோதாமல் இருக்க கிரேன் ஓட்டுநர் அவரது வாகனத்தை திருப்பியதாகத் தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் சென்ற வாகனத்தின் மீது கிரேன் உரசியதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் ஆறுமுகம் இடதுபுறத்திலும், ஜோதிமணி வலதுபுறத்திலும் விழுந்தனர். இதில் கிரேனின் சக்கரம் ஜோதிமணியின் மீது ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

சூலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் தப்பியோடி விட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2