கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பறிமுதல்

 Saturday, March 16, 2019  09:37 AM

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படையில் 30 குழுவினரும், நிலை கண்காணிப்புக் குழுவில் 30 குழுவினரும் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Vanavil NEw2
தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் விதிகளுக்குப் புறம்பாக உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் பணம், பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டால் அவை பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்படும்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் கொண்டுச் செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருமான வரித் துறையின் பரிந்துரையின்படி மாவட்ட கண்காணிப்புக் குழுவினரால் அந்தத் தொகை விடுவிக்கப்படும்.

அதன்படி, கோவையில் வியாழக்கிழமை வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.7.44 லட்சம் ரொக்கம், 384 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்ட 1-ஆவது நிலை கண்காணிப்புக் குழு அணியினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். இந்தத் தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2