இழப்பீடு தராமல் இழுத்தடித்த, இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை, ஜப்தி செய்ய உத்தரவு

 Saturday, March 16, 2019  07:25 AM

விபத்தில் இறந்த எல்.ஐ.சி., ஏஜென்ட் குடும்பத்துக்கு, 70 லட்சம் ரூபாய் இழப்பீடு தராமல் இழுத்தடித்த, இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை, ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்தவர் பரமசிவம்,40; எல்.ஐ.சி., ஏஜென்டாக பணியாற்றி வந்த இவர், 2013, ஆக., 21ல், செல்வபுரத்தில் பைக்கில் சென்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதி இறந்தார்.


Vanavil New1
இழப்பீடு கேட்டு, அவரது மனைவி சரிதா மற்றும் மூன்று பெண் குழந்தைகள் சார்பில், கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி வெங்கடசுப்பிரமணியன், விபத்தில் பலியான பரமசிவம் குடும்பத்துக்கு, 51 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, 2018, ஏப்., 16ல் உத்தரவிட்டார்.

ஆனால், கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்காமல், இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்தது. இதனால், இழப்பீட்டு தொகை, வட்டியுடன் சேர்த்து, ரூ.70 லட்சமாக அதிகரித்தது.

இதனால், வக்கீல் ஆனந்த் மூலம், அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி, இழப்பீடு தொகை வழங்க தவறியதால், கோவை நஞ்சப்பா ரோட்டிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலக பொருட்கள் அனைத்தையும், ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2