கோவை - பொள்ளாச்சி ரயிலில் மீண்டும் 8 பெட்டிகள்


Source: dinamalar
 Saturday, March 16, 2019  07:22 AM

பொள்ளாச்சி - கோவை ரயிலில், பராமரிப்புக்காக குறைக்கப்பட்ட ரயில் பெட்டி மீண்டும் இணைக்கப்பட்டதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அலுவலக நேரத்தை அனுசரித்து இயக்கப்படும் பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலில், கடந்த சில மாதங்களாக பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சராசரியாக, ஆயிரம் பயணிகள் தினமும் பயணிப்பதால், நின்றபடி பயணிக்கின்றனர்.இந்த ரயில் எட்டுப் பெட்டிகளுடன் இயங்கி வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், பராமரிப்பு பணிகளுக்காக ஒரு பெட்டி அகற்றப்பட்டது. ஏழு பெட்டிகளுடன் ரயில் இயங்கியதால், பயணிகளுக்கு போதிய இட வசதியின்றி அதீத கூட்ட நெரிசல் காணப்பட்டது.

Vanavil NEw2

இதனால், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அகற்றப்பட்ட பெட்டி நேற்று மீண்டும் இணைக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண்கள் பெட்டி, 'கார்டு கோச்' உடன் இணைந்துள்ளதால், பாதியளவு இருக்கைகள் மட்டுமே உள்ளன. பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெண்களுக்கென முழுப் பெட்டி ஒதுக்க வேண்டும். பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2