சுந்தராபுரம் பகுதியில் பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

 Saturday, March 16, 2019  07:21 AM

பழைய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Vanavil New1
கோவை, கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவருக்குச் சொந்தமான கிடங்கு சுந்தராபுரம் பகுதியில் உள்ள மதுக்கரை மார்க்கெட் சாலையில் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை தெற்கு, வடக்கு தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடினர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. கிடங்கில் பணியாள்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து சுந்தராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2