கோவையில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் சார்பில் பி.ஆர். நடராஜன் போட்டி

 Friday, March 15, 2019  03:59 PM

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் தமிழக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிடப்பட்டுள்ளார். அதன்படி கோவையில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜனும், மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிடுகிறார்கள்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் விவரத்தை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

Vanavil New1

கோவை மாவட்ட முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், 1968ம் ஆண்டு முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

மதுரைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2