எலும்பு வலி வருவதற்கான காரணமும் - அறிகுறியும்

 Friday, March 15, 2019  03:30 PM

எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும். இந்த நோயின் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும் பார்க்கலாம்.

எலும்புகள் திடீரென மென்மையான மாதிரி உணர்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வு போன்றவையே எலும்பு வலியாக கருதப்படுகிறது. எலும்பு வலி என்பது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எலும்பு வலி இருக்கும். எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும்.

எலும்பு வலி ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் :

* கீழே விழுவது, வாகன விபத்துகளின் போது பலமாக அடிபட்டு கொள்வது போன்றவற்றால் எலும்பு வலி வரலாம். அப்படி விழுவதன் விளைவால் எலும்புகள் உடைந்து, ஃபிராக்சர் ஏற்படலாம். எலும்புகளுக்கு ஏற்படும் எந்தவகையான பாதிப்பும் இதற்கு காரணமாகலாம்.

அறிகுறிகள் : வீக்கம், அசௌகரியமான உணர்வு, எலும்புகளின் அமைப்பில் வித்தியாசம் தெரிவது, எலும்புகள் அசையும்போது வித்தியாசமான சத்தம் வருவது.

* எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் வைட்டமின் டி. இவை இரண்டும் குறையும்போது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற நோய் ஏற்படுவது சகஜம். இந்த நோய் தீவிர நிலையை எட்டும்போது எலும்புகளில் வலி ஏற்படும்.

அறிகுறிகள் : தசை மற்றும் திசுக்களில் வலி, தூக்கமின்மை, தசைபிடிப்பு, அதிக களைப்பு, பலவீனமாக உணர்தல்.


Vanavil New1
* உடலின் ஏதோ ஒரு பகுதியில் புற்றுநோய் உண்டாகி, அது சீக்கிரமே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவும். மார்பகம், சிறுநீரகம், நுரையீரல், தைராய்டு புற்றுநோய்கள் தீவிரமடையும்போது எலும்புகளுக்கும் பரவும். அதன் காரணமாக எலும்புகளில் கடுமையான வலி ஏற்படும்.

அறிகுறிகள் : தலை வலி, நெஞ்சு வலி, ஃபிராக்சர், மயக்கம், மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம்.

* எலும்புகளிலேயே உருவாகும் புற்றுநோய் இது. இது மிக அரிதான புற்றுநோய் என்றாலும் ஏற்பட்டுவிட்டால் எலும்புகளின் அடிப்படை அமைப்பையே சிதைத்துவிடும். எலும்புகளில் வலி அதிகரிக்கும்.

அறிகுறிகள் : எலும்புகள் உடைதல், மரத்து போதல், தோலின் அடியில் வீக்கம்.

* சில நோய்கள், உதாரணத்துக்கு ‘சிக்கெல் செல் அனீமியா’ போன்றவை எலும்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்பவை. போதுமான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் எலும்பு திசுக்கள் அழிந்துவிடும். இதனால் எலும்புகள் பலவீனமாகி, அவற்றில் வலியும் ஏற்படும்.

அறிகுறிகள் : மூட்டு வலி, மூட்டுகளை அசைக்க முடியாத நிலை, பலவீனம்.

* எலும்பு மஜ்ஜைகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு லுகேமியா(Leukemia) என்று பெயர். எலும்பு செல்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜை எலும்புகளில் காணப்படும். அவற்றில் உண்டாகும் புற்றுநோய் கடுமையான எலும்பு வலியை கொடுக்கும். கால்களில் இந்த வலி அதிகமாக இருக்கும்.

அறிகுறிகள் : தோல் வெளிறிப் போதல், களைப்பு, உடல் எடை குறைவது, மூச்சு விடுவதில் சிரமம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2