பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்: 4 பேரையும் காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!


Source: tamil.oneindia
 Friday, March 15, 2019  12:08 PM

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசர், சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றிட வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தங்கள் வரத் தொடங்கியதையடுத்து, நேற்று இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை வெளியிட்டது.

Vanavil New1

இதற்கிடையே, இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக அறியப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக சிறையில் உள்ள 4 குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான் விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. அப்போது, நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2