மருதமலை வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ

 Friday, March 15, 2019  11:30 AM


Vanavil New1
கோவை வனச்சரகம் மருதமலை பகுதியில் நேற்று தனியார் காடுகளில் தீ பரவியது. இதனையடுத்து வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கோவை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையை சாார்ந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், தீயானது வேகமாகப் பரவி வனப்பகுதிக்குள் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது. ஓணாப்பாளையம் முதல் அட்டுக்கள் மலைப் பகுதி வரை தீ பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2