ஜிம்பாப்வே எம்.பி.,க்கு மறுவாழ்வு தந்த கோவை மருத்துவர்கள்!


Source: tamil.samayam
 Friday, March 15, 2019  11:30 AM

ஜிம்பாப்வே எம்.பி., முடாம்போவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

ஆப்ரேஷன் முடிந்த அடுத்த நாளே அவர் சகஜமாக நடக்க முடிந்ததாகவும், எப்பவும் போல திரவ உணவுகளை சிரமம் இல்லாமல் உட்கொள்ளமுடிந்ததாகவும் முடாம்போ மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜிம்பாப்வே எம்.பி., முடாம்போவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். ஜிம்பாப்வேவின் வடக்கு தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் முடாம்போ. இவர் கடந்த வாரம் சரியாக பேசக்கூட முடியாமல், நிமிடத்துக்கு ஒருமுறை இருமிய படியே கோவை மருத்துவமனைக்கு வந்தார். தவிர, இவரால் சிறிதளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடிந்தது.

இந்தியாவில் மேல் மருத்துவம்:


Vanavil New1
அங்கு இவரை சோதனை செய்த மருத்துவர்கள், இவரின் உணவுக்குழாய் பெரிதாகி முழுமையாக அடைக்கும் நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதற்காக கடந்த ஆண்டிலேயே அவர் நாட்டில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின் மேல் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு செல்ல இவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தவறான சிகிச்சை:

இதையடுத்து இவர் கோவை மருத்துவமனை சிகிச்சைக்காக வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரை சோதித்த மருத்துவர்கள் இவருக்கு அறுவை சிகிச்சை தவறாக மேற்கொள்ளப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவருக்கு லேப்ராஸ்கோபிக் முறையில் 5 இடங்களில் துளையிட்டு ஆப்ரேஷசன் செய்தனர்.

சகஜ நிலை:

சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த ஆப்ரேஷனில் அவரின் மற்ற உறுப்புகள் எதுவும் பாதிக்காத அளவு வெற்றிகரமாக மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்துள்ளனர். இதையடுத்து ஆப்ரேஷன் முடிந்த அடுத்த நாளே அவர் சகஜமாக நடக்க முடிந்ததாகவும், எப்பவும் போல திரவ உணவுகளை சிரமம் இல்லாமல் உட்கொள்ளமுடிந்ததாகவும் முடாம்போ மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2