நீதி கிடைத்தே ஆகணும்,வலுக்கும் போராட்டம்..!! களத்தில் பெண்கள்,கைகோர்க்கும் சமூகநல அமைப்புகள்..!!

 Friday, March 15, 2019  10:30 AM

பொள்ளாச்சியில் 100க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடத்த முயற்சி எடுக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு குரல் எழுப்புவோரின் குரல்வளையை நெரிக்கும் வகையில், போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், போராடுபவர்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்தி வன்முறையை ஏவுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


Vanavil New1
இந்தநிலையில் கோவையில் இருந்து மாணவர்கள் பொள்ளாச்சி சென்று போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலையடுத்து, இன்று பொள்ளாச்சி நகரம் முழுவதிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரன்களை தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுக்க காட்டு தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டம்..

உடுமலைப்பேட்டை GVG மகளிர் கல்லூரி,களத்தில் உள்ள புகைப்படங்கள் தான் இவை...உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.தற்போது ஆங்காங்கே தமிழகம் முழுக்க காட்டு தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டம்.. ஜல்லிக்கட்டு போராட்டமும் மாணவர்கள் மூலமே வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக மாறியது மட்டுமின்றி நீதி கிடைக்க பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2