முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்' என்று, கோவை கலெக்டர்

 Friday, March 15, 2019  05:56 AM

இது குறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:

கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், மூன்று வீதம், 10 சட்டசபை தொகுதிகளுக்கு, 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.நிலையான கண்காணிப்புக்குழுவில், 30 குழுக்களும், 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Vanavil NEw2
மொத்தம், 20 குழுக்கள், பொதுக்கூட்டம், பேரணி நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.உரிய ஆவணங்கள் இன்றி, 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள், பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்கள் இன்றி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், கோவை மாவட்டத்தில் நடந்த சோதனைகளில், பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், 3 லட்சம் ரூபாயும், வால்பாறை தொகுதியில், 2.47 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை, ஆனைமலை, காளியாபுரம் பகுதியில், கொண்டு செல்லப்பட்ட, 354 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2