கோவை கலெக்டர் ஆபிசில், அனைத்து பத்திரிகை, 'டிவி', இணையதள செய்திகளை கண்காணிப்பதற்காக, மீடியா அறை


Source: dinamalar
 Friday, March 15, 2019  05:52 AM

கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்தல் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிப்பதற்காக, பல்வேறு நுாதன முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது.


Vanavil NEw2
தேர்தல் விதிமீறல்களை, பொதுமக்களே வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க வசதியாக, 'சிவிஜில்' செயலி தொடங்கப்பட்டுள்ளது.ப

த்திரிகை, 'டிவி', செய்தி இணையதளங்களில் தேர்தல் விதிமீறல் ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணிக்கவும், பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீடியா அறையில், அனைத்து தமிழ், ஆங்கில செய்தி சேனல்களும், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, கலெக்டர் ராஜாமணி நேற்று ஆய்வு செய்தார். தொலைக்காட்சிகள் தவிர, இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கண்காணிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2